– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடியில் பல்வேறு சமூக அபிவிருத்தி பணிகளை செய்துவரும் காத்தான்குடி சமூக மதிப்பிட்டுக்கான அமைப்பின் வருடாந்த நிருவாக ஒன்று கூடலும் விஸேட தர்பிய்யா நிகழ்வும் 08-03-2013 வெள்ளிக்கிழமை மாலை ஆறு 06.மணிக்கு காத்தான்குடி பஸ் டிப்போ அருகாமையிலுள்ள காத்தான்குடி செஞ்சிலுவை சங்க கட்டடத்தில் காத்தான்குடி சமூக மதிப்பிட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை தலைமையில் இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி சமூக மதிப்பிட்டுக்கான அமைப்பின் இணைச் செயலாளர் மௌலவி எம்.ஏ.எம். மஸூத் ( ஹாஸிமி) தெரிவித்தார்.
வருடாந்த நிருவாக ஒன்று கூடலை தொடர்ந்து இஸ்லாமிய அடிப்படையில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனும் தலைப்பில் விஸேட தர்பிய்யா நிகழ்வை காத்தான்குடி மஃஹதுஸ்ஸூன்னா பெண்கள் அறபுக்கல்லூரியின் தலைவர் அஸ்ஸேஹ்க் மௌலவி றிஸ்வான் (மதனி) நிகழ்த்தவுள்ளார்.
குறித்த காத்தான்குடி சமூக மதிப்பிட்டுக்கான அமைப்பானது சமூகத்தில் நலிவுற்றோர் மற்றும் வசதிகுறைந்த மாணவர்கள் போன்றோறை இனங்கண்டு பல்வேறு உதவிகளையும் உத்தாசைகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment