கல்முனை சந்தை வீதி, வடிகான்கள் சீரின்மையால் மக்கள் பட்ட அவதிக்கு நிரந்தர தீர்வு

BY FM. FARHAN
BY FM. FARHAN

பழுளுல்லாஹ் பர்ஹான்

கல்முனை சந்தை வீதி, வடிகான் என்பன அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று (05.03.2013) காலை  மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

புற நெகும அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 7,490,103.44 ரூபா செலவில் குறித்த வீதி, வடிகான் என்பன அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மாநகர பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ. எம். றியாஸ், எச். எம். எம். நபார், சந்தை வர்தக சங்க பிரதிநிதிகள், சர்வ மத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மூவின மக்களும் பயணிக்கும் இப்பிரதான வீதி பல வருடங்களாக குன்றும் குழியுமாக காணப்பட்டது. அத்தோடு மழை காலங்களில் இவ்வீதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுண்டு. இதனால் மக்கள் பெரும்  அசௌகரியங்களை எதிர்நோக்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment