– பழுலுல்லாஹ் பர்ஹான்

இன்று 04-03-2013 திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாநகர சபை நகர மண்டபத்தில் மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ந.சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்ற 2012 மட்டக்களப்பு உள்ளுராட்சி மகுடம் விருது விழாவில் காத்தான்குடி நகர சபைக்கு நான்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அவையாவன நிருவாக முகாமைத்துவத்தில் முன்னின்று செயற்படும் தவிசாளர், திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் முன்னின்று செயற்படும் தவிசாளர் போன்ற தவிசாளர் சேவைக்கான விருது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பரிடம்

– வழங்கிவைக்கப்பட்டதோடு சிறந்த அலுவலக கட்டமைப்பைக் கொண்ட உள்ளுராட்சி மன்றம் தவிசாளர், செயலாளர் , மாவட்ட மாகாண மட்டத்தில் அதிகளவான விருதுகளைப் பெற்றுமாவட்டத்திற்கு பெருமை சேர்த்த உள்ளுராட்சி மன்றம் தவிசாளர், செயலாளர் போன்ற தவிசாளர், செயலாளர் சேவைக்கான விருது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்தினால் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் ஆகியோரிகளிடம் வழங்கி கௌரவிக்கபட்டது.

இன்று இங்கு இடம்பெற்ற 2012 மட்டக்களப்பு உள்ளுராட்சி மகுடம் விருது விழாவில் உள்ளுராட்சி மன்றங்களில் நான்கு விருதுகளைப்பெற்ற உள்ளுராட்சி மன்றம் காத்தான்குடி நகர சபை என்பது குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி நகரசபைக்கு எமது ‘உங்கள் காத்தான்குடி’ சார்பாகவும் அதன் வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-இயக்குனர்
Leave a comment