2012 மட்டக்களப்பு உள்ளுராட்சி மகுடம் விருது விழா மட்டக்களப்பில் – கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் பிரதம அதிதி

– பழுலுல்லாஹ் பர்ஹான்

BY: FM. Farhan
BY: FM. Farhan

2012 மட்டக்களப்பு உள்ளுராட்சி மகுடம் விருது விழா இன்று 04-03-2013 திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாநகர சபை நகர மண்டபத்தில் மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ந.சத்தியானந்தி தலைமையில் மிகக் கோலாகலமாக  இடம்பெற்றது.

இங்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் முன்மாதிரியாக செயற்படும் காரியாலய காரிய சகாயர் (கே.கே.எஸ்.),முன்மாதிரியாக சேவையாற்றும் அலுவலக சிற்றூழியர் , முன்மாதிரியாக செயலாற்றும் காவலாளி,அலுவலக வாகன பராமரிப்பிலும் நேரமுகாமைத்துவத்திலும் முன்மாதிரியாக செயற்படும் சாரதி, முன்மாதிரியாக செயற்படும் வீதித் தொழிலாளி, முன்மாதிரியாக செயற்படும் சுகாதார தொழிலாளி, ஆவண முகாமைத்துவத்திலும் அபிவிருத்தித் திட்டங்களில் பங்களிப்புடனும் செயற்படும் சனசமூக நிலையம், பிள்ளைமைய கற்றலில் முன்மாதிரியாக செயற்படும் பாலர் பாடசாலை ,நூலக செயற்பாடுகளில் சிறந்த அடைவுகளைப் பெற்ற நூலக பொறுப்பாளர்   (மாகாணத்தில் முதலிடம்) ,தொழில்நுட்பத்துடன் கூடிய நூலக கட்டமைப்பு,வாசிப்பு செயற்பாடுகளில் முனைப்புடன் செயற்படும் வாசகர் வட்டம், அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பொறுப்புடன் கண்காணித்து செயற்பட்ட சமூக கணக்காய்வுக் குழு…

உள்ளுராட்சி மன்ற திட்டமிடல் செயற்பாடுகளில் முன்மாதிரியாக செயற்பட்ட உள்ளுராட்சி உதவியாளர்,அபிவிருத்தி வேலைகளை சிறந்த முறையில் கண்காணித்து செய்து முடித்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்,வருமானமீட்டலில் முனைப்புடன் செயற்பட்ட வருமான மேற்பார்வையாளர்,உள்ளக கணக்காய்வு நடவடிக்கையினை திறம்படச் செயற்படுத்தும் உத்தியோகத்தர்,மக்கள் தொடர்பு நடவடிக்கையினை சிறப்பாக செயற்படுத்திய உத்தியோகத்தர்,உள்ளுராட்சி துறையில் இறுதிக்கணக்கறிக்கை தயாரிப்பதில் நிபுணத்துவத்திற்கான விருது…

உள்ளுராட்சி மன்றச் செயற்பாடுகளில் தவிசாளருடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படும் பிரதேச செயலாளர்,உள்ளுராட்சி மன்றத்துடன் இணைந்து செயற்பட்டு ஒத்துழைப்பு வழங்பும் சுகாதார வைத்திய அதிகாரி,உள்ளுராட்சி மன்றத்துடன் இணைந்து செயற்பட்டு சிறந்த ஒத்துழைப்பு வழங்கும் பொதுச் சுகாதார பரிசோதகர் ,உள்ளுராட்சி மன்றத்துடன் இணைந்து செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள்,ஒய்வுபெற்ற பின்னரும் உள்ளுராட்சி மன்றத்துடன் இணைந்து செயற்பட்டு ஒத்துழைப்பு வழங்கும் சமூக சேவையாளர்,உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகளில் நீண்ட காலமாக இணைந்து செயற்பட்டு ஒத்துழைப்பு வழங்கும் சமூக பிரஜை,உள்ளுராட்சியில் பெண்களின் பங்களிப்பும் அதனூடான செயற்பாடுகளின் வெளிப்படுத்துகையும்…

நிருவாக முகாமைத்துவத்தில் புரிற்துணர்வுடனும் பல சாராரையும் இணைந்து முன்னின்று செயற்படும் செயலாளர்,உள்ளுராட்சி நடவடிக்கைகளுக்கு எல்லாப் பங்குதாரர்களையும் இணைத்து உள்ளுராட்சி சேவைகளைப் பரவலாக்கும் செயலாளர்,பொறுப்புடன் உரிய காலத்திற்குள் அறிக்கைகளை சமர்ப்பிக்கும் செயலாளர் ,பெறுகை நடைமுறையில் முன்மாதிரியாக செயற்படும் உள்ளுராட்சி மன்ற செயலாளர்,புறநெகும திட்டத்தினை வெற்றிகரமாக முடிவுறுத்தி மக்களின் வரலேற்பை பெற்ற உள்ளுராட்சி மன்ற செயலாளர்…

 உள்ளுராட்சி மன்ற சேவைகளில் முன்மாதிரியாகத் செயற்படும் சபை உறுப்பினர், உள்ளுராட்சி நடவடிக்கையில் முன்மாதிரியாகத் செயற்படும் உப தவிசாளர், மக்கள் தொடர்பில் முன்மாதிரியான தவிசாளர்,நிருவாக முகாமைத்துவத்தில் முன்னின்று செயற்படும் தவிசாளர், வெளி நிதியீட்டங்களைக் அதிகளவில் பெற்று பிரதேச அபிவிருத்தி நடவடிக்கையில் முன்னின்று செயற்படுத்தும் தவிசாளர், உள்ளுராட்சிச் செயற்பாடுகளில் நல்லாட்சி பண்புகளில் கவனம் செலுத்தும் தவிசாளர்…

உள்ளுராட்சி துறையில் கலை இலக்கிய பண்பாட்டு விடயங்களை அமுல்படுத்திய தவிசாளர்,அனர்த்த காலங்களில் இடர் நிவாரண சேவைக்காக இணைந்து செயற்பட்ட தவிசாளர், அரச-தனியார் பங்குடமைச் செயற்பாடுகளில் சிறந்த அடைவுகளைப் பெற்ற தவிசாளர்,திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் முன்னின்று செயற்படும் தவிசாளர் …

உள்ளுராட்சி மன்றத்தின் வருமான அதிகரிப்புக்காக சிறந்த உத்திகளைச் செயற்படுத்தி ஏனைய உள்ளுராட்சி மன்றங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதற்காக, பொது மக்கள் குறைகள் பொறிமுறையின் (LAGRM) ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் முன்னின்று செயற்படுத்தி ஏனைய உள்ளுராட்சி மன்றங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதற்காக அதன் பிரதம நிர்வாகி,உள்ளுராட்சி மன்ற நிதி மூலத்திலிருந்து அதிகளவு நிதியை அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு மேற்கொள்வதில் முன்னின்று செயற்பட்ட உள்ளுராட்சி மன்றம்,சிறந்த அலுவலக கட்டமைப்பைக் கொண்ட உள்ளுராட்சி மன்றம் தவிசாளர், செயலாளர், பொது மக்கள் குறைகள் பொறிமுறையின் (LAGRM) ஊடாக மக்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னின்று செயற்படும் தவிசாளர், செயலாளர்,மாவட்ட மாகாண மட்டத்தில் அதிகளவான விருதுகளைப் பெற்றுமாவட்டத்திற்கு பெருமை சேர்த்த உள்ளுராட்சி மன்றம் தவிசாளர்,செயலாளர் போன்ற உள்ளுராட்சி பிரதிநிதிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ,முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் இன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரகாந்தன்,கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.எம்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் மற்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார் மற்றும் அதிதிகளினால் 2012 மட்டக்களப்பு உள்ளுராட்சி மகுடம் விருதும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கபட்டது.

இதன் போது 2012 மட்டக்களப்பு உள்ளுராட்சி மகுடம் விருது விழா சிறப்பு மலரும் உள்ளுராட்சி துறை சம்மந்தமான குறுந்திரைப்படமும் மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ந.சத்தியானந்தியிளால் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் இன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரகாந்தனுக்கு வழங்கி வெளியிட்டுவைக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.எம்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மா.உதயகுமார், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள்.அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment