-MJ
இறுதிக்கட்டப் போரின் போது அப்பாவி பொதுமக்களைப் படுகொலை செய்த போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இத்தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றவு அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது.
இலங்கை இறுதிப் போரின் போது தமிழர்கள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளை ஏற்கனவே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்து நாட்டின் சனல்-4 (Channel-4) தொலைக்காட்சி கூடுதலாகவும் ஆவணப்படங்களை வெளியிட்டு வருகிறது. இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காட்சியை இம்முறை மேலதிக ஆவணமாக சனல்-4 தாக்கல் செய்கிறது.
இந்த நிலையில், 47 நாடுகளை உறுப்பினர்களாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. இதில் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறது. நாளை இந்த தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்கிறது. தீர்மான விவரம் வெளியாகவில்லை என்ற போதிலும், இலங்கைக்கு சர்வதேச மனித உரிமை குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதில் இடம் பெறும் என்று தெரிகிறது. இந்த தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே அறிவித்து உள்ளன.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும், சர்வதேச தமிழ் அமைப்புகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு தமது நிலையை இன்னும் அறிவிக்கவில்லை.
இதனிடையே ஐ.நா.மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின் தீர்மானத்தை கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் ஓட்டெடுப்பின்றி ஒரு மனதாக நிறைவேற்ற அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது.
புலிகளின் ஆதரவாளர்களின் உலக ஒருமைப்பாட்டின் வெளியீடே இந்த தாக்கல் என்பது மறைமுகமான உண்மை. இலங்கைத் தமிழர்களை வைத்து ஐரோப்பாவில் சொகுசு வாழ்க்கையும் ஆடம்பர வியாபாரங்களையும், கௌரவத்தையும் பெற்றுக்கொள்ளும் உன்னதமான நோக்கில் சனல் 4ன் பக்கச்சார்பாக இத்தாக்கல் அமெரிக்காவின் கைபொம்மைகளாக இருந்து செய்யப்படுவது அப்பட்டமான வெளிச்சம்.
வேடிக்கை என்னவென்றால் விடுதலைப் புலிகளால் கடந்த 30 வருடக காலமாக சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி உயிர்களை மறைத்து இத்தாக்கல் செய்யப்படுகிறது. உலக நீதியில் புலிகளின் நரவேட்டை வெளிச்சத்துக்கு வந்தாலும், மேலைத்தேய புலம் பெயர் தமிழர்களின் சுய வாழ்வுக்காக இத்தாக்கல் செய்யப்படுவதும் வெளிச்சம்.
இலங்கையை அபாயகரமான நாடாகக் காட்டி ஐரோப்பாவில் குடியுரிமையை நிலைக்கச் செய்யவும், மேலதிக வசதிகளைப் பெற்றுக்கொள்ளவும் இத்தகைய ஏற்பாடுகள் அதிரடியாக இடம்பெற்று வருகின்றன. அரசாங்க சார்பில் இத்தகைய தாக்கல் பொய் என மறுக்கப்பட்டிருந்தது.
இலங்கை தனது கழுத்தை சுருக்குக் கையிற்றுக்குள் வைத்திருக்கும் இத்தருணத்தில் பொது பல சேனாவின் துவேச ஆக்கிரமிப்புக்களை கண்டிக்காது அல்லது நிறுத்தாது இருப்பது அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களையும் அரபு நாடுகளையும் பகைத்துக்கொண்டு திண்டாட வேண்டிய ஓர் நிலையில் இருப்பதும் ஆபத்துக்குரியதே!
Leave a comment