பாடசாலை கிரிக்கெட் போட்டிகள்: வீதிகளில் கோஷம் எழுப்பினால் சட்ட நடவடிக்கை

280_181_School-cricket[1]பாடசாலைகளுக்கு இடையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் இடம்பெறும் போது வீதிகளில் இறங்கி கோஷங்களை எழுப்புதல், போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் இடம்பெறும் இது போன்ற விடயங்கள் தொடர்பாக கண்காணிக்கவென சீருடையிலும், சிவில் உடைகளிலும் பொலிஸார் விஷேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

வீதிகளில் இறங்கி கோஷங்களை எழுப்புதல், போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தல் போன்ற சட்ட விரோத மற்றும் ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமென மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸ் திணைக்களம் வேண்டுகோள் விடுக்கின்றது.

கொழும்பு நகர் மற்றும் அதனை அண்டிய நகர்புறங் களிலுள்ள பாடசாலைகளில் அல்லது பாடசாலை அண்மித்த பகுதிகளில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுபவர்கள் பொது மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

–தினகரன்

Published by

Leave a comment