துபாய் கல்fப் பூட் (Gulf Food) 2013 உணவுப்பொருள் வர்த்தக கண்காட்சி

ACM. சப்றி

dubai 5
BY: ACM. Sabry

இலங்கையைச் சேர்ந்த உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் 33 கம்பனிகள் துபாயில் இடம்பெற்ற கல்கப் பூட் 2013 வர்த்தகக் கண்காட்சியில் பங்கு பற்றி இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை, ஏலம், கராம்பு, மிளகு, தேங்காய் எண்ணை, மரக்கறி, பழவகை, பிஸ்கட், குளிர்பானம் மற்றும் பதனிடப்பட்ட உணவுப்பொருட்கள் கண்காட்சிக்கு வைத்து இருந்தன.

பெப்ரவரி 25 முதல் 28 வரை இடம்பெற்ற இந்த மாபொரும் வணிகக் கண்காட்சியை துபாயில் உள்ள இலங்கை தூதுவராலயம்,  இலங்கை தேயிலை சபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தது.

இலங்கையில் இருந்து துபாய் வந்த ஏற்றுமதியாளர்களை வரவேற்கு முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இராப்போசன விருந்து வைபவத்தில் துபாயில் உள்ள இலங்கை கொன்சல் ஜெனரல் எம்.எம். அப்துல் றஹீம் பிரதான உரையை நிகழ்த்தி அரபு நாடுகளில் இலங்கை பொருள்களுக்கு இருக்கும் சந்தை வாய்புகளை எடுத்துரைத்ததுடன் பதனிடப்பட்ட உணவுப்பொருட்களை அரபு சந்தைகளில் விநியோகிப்பதாயின் ஹலால் (HALAL ) அத்தாட்சிப் பத்திரத்தின்
அவசியத்தினையும் விளக்கினார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் மட்டும் கடந்த ஆண்டு 2012 இல் 7 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு நுகர்வு செய்யப்பட்டதுடன் மறு ஏற்றுமதியும் செய்யப்பட்டது.

இவ்வாண்டில் இது 9 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இதனால் இலங்கை உணவு ஏற்றுமதியாளர்கள் இவ்விடயத்தில் மிகவும் கவணம் செலுத்தி இலங்கை ஏற்றுமதியை அபிவருத்தி செய்ய வேண்டும் எனவும் அதற்காக துபாயில் உள்ள இலங்கைத் தூதுவராலயம் உதவிகள் வழங்கும் எனவும் எடுத்துரைத்தார்.

This slideshow requires JavaScript.


   

Published by

Leave a comment