கூடங்குளத்தில் கதிர்வீச்சு கசிந்து வெளியாகிறது: இலங்கை அமைப்பு குற்றச்சாட்டு

02-koodankulam1-300[1]-OIT

தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு வெளியாகி இருப்பதாக இலங்கையைச் சேர்ந்த “கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் இயக்கம்” குற்றம்சாட்டியுள்ளது.

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானதுதான் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அண்மையில் கூட கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பீதி பரவியது.

இந்த கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது “கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற அமைப்பு, கடந்த பிப்ரவரி 27-ந் தேதியில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு வெளியாகி வருகிறது. ஆனால் இலங்கை அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த விஷயத்தில் உண்மை நிலையை இலங்கை அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் நிராகரித்துள்ளதுடன் மறுப்பும் தெரிவித்திருக்கிறது.

Published by

Leave a comment