உள்ளுராட்சி மன்ற முஸ்லிம் உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்தார்

president--[1]உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (1) பிற்பகல் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌஸி- பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ- பிரதி அமைச்சர்களான பைஸர் முஸ்தபா- அப்துல் காதர்- கிழக்கு மாகாண முதலமைச்சர் அப்துல் மஜீத்- பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர்- மாத்தளை நகர முதல்வர் ஹலீம் கரீம் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

president--[1]

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

– அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment