இஸ்ரேலுக்குச் சென்று வந்திருக்கும் அமைச்சர் பீரிஸ்: முஸ்லிம்கள் அச்சம்!

_FI_5203[1]-MJ

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சென்றவாரம் இஸ்ரேலுக்குச் சென்றிருந்தார்.

இஸ்ரேல் சென்றிருந்த அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இஸ்ரேலிய பிரதமர் நெடன்யாகுவையும் இன்னும் பல அதிகாரிகளையும் சந்தித்திருந்தார்.

இலங்கைக்கு மேற்குலகில் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு இலங்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்குடன் அங்கு சென்றிருந்ததாகவும் தெரிய வருகிறது.

இஸ்ரேல் சென்றிருந்த அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலங்கையின் சமகால நிலைமைகளை எடுத்துக் கூறியதுடன், சமாதானம் சூழ்ந்திருக்கும் இலங்கை என்பதை சுட்டிக்காட்டி இருந்தார்.

ALeqM5hW_WkoZf3UhOSQPpkdCO1UIwvoVg-300x225[1]

‘டெல் அவிவ்’ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தனது விசேட உரையில் அமைச்சர் பீரிஸ் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன் பின்னர் இலங்கைக்கு எப்போதும் ஆதரவாச் செயற்படுவதாகவும் இலங்கைக்கும் இஸ்ரேலுக்குமடையில் சுமூகமான உறவுகள் வலுப்பெறும் எனவும் இஸ்ரேலிய பிரதமர் நெடன்யாகு உறுதியளித்திருக்கின்றார்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பேரனவாதக் குழுவின் அச்சுறுத்தலின் பின்னால் நோர்வே இருப்பதாக நம்பப்பட்டுவரும் இச்சந்தர்ப்பத்தில், அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அவர்களின் இரகசிய விஜயம் இலங்கை முஸ்லிம்களிடத்தில் மென் மேலும் பல சந்தேகங்களைத் தோற்றுவித்திருக்கின்றது. (MJ)

Published by

Leave a comment