இலங்கையில் இன்றைய முஸ்லிம் சமூகம்….

– அபூ அஸ்ஜத்

அமைச்சர் சம்பிக்க ரணவணக்க அப்பொருப்பில் இருந்து மீறியுள்ளதை ஜனாதிபதி கண்டுக் கொள்ளாமல் இருப்பது ஆழமான ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

Buddhist-monks-destroy-Muslim-shrine-in-Sri-Lanka[1]இலங்கயைில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பலசேனா என்னும் பௌத்த கடும் போக்கு அமைப்பு ஆரம்பித்துள்ள தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மௌனம் சாதிப்பது ஏனென்ற கேள்வி இன்று அடிமட்டத்தில் உள்ள மக்களின் உள்ளங்களில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் ஒன்றாகும்.

இதற்கு விடை தேட முனையும் போதெல்லாம் அவை ஏதோ ஒரு வகையில் திசை திருப்பப்பட்டு மக்களை ஏமாற்றிவிடும் கதையாகவே மாறிவருகின்றது.

இலங்கை தேசம் என்பது இங்கு வாழும் அனைத்து சமூகங்களுக்கும் உரித்துடையது என்பதை எவராலும் புறக்கணிக்க முடியாத ஒன்று. இன ரீதியினால், மொழி ரீதியினால், மத ரீதியினால் வேறாக இருந்த போதும், இலங்கையர் என்ற நாமத்துக்கு அனைத்து மக்களும் உரித்துடையவர் என்பதை பௌத்த கடும் போக்கு அமைப்பு அண்மையகாலமாக தமது புதிய சித்தாந்தத்தில் ஏற்றுக் கொள்ளமுடியாது என்பதை வெளியிட்டுள்ளது.

இலங்கையினை சுதந்திர நாடாக ஏற்படுத்துவதற்கு அன்றைய தமிழ்இமுஸ்லிம் தலைவர்கள் ஆற்றிய பங்களிப்பை இந்த பௌத்த கடும் போக்கு இனவாதிகள் மறந்துவிட்டார்களா? அல்லது மறைத்து வைத்துக் கொண்டு செயற்படுகின்றார்களா என்ற கேள்வியே எழுந்து வருகின்றது.

Buddhist-monks-destroy-Muslim-shrine-in-Sri-Lanka[1]

வரலாற்று உதாரணங்களை எடுத்துக் கூறி இன்னும் நாங்கள் 300 வருடம் பழைமைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இலங்கைக்கு எதிராக கடந்த ஜெனீவா மாநாட்டில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை விமர்சிப்பததற்கும், அதற்கெதிராக செயற்படுவதற்கும் உலக அரபு நாடுகளின் தேவைகளை பெற்றுக் கொண்ட  இந்த அரசாங்கம் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை சிங்கள பொது பலசேனாவால் முன்னெடுக்கப்பட்டுவரும் சம்பவங்கள் குறித்து  காத்திரமான நடவடிக்கையெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

ஒரு அரசாங்கம் என்பது ஆளும் கட்சியின் கையில் இருக்கும் ஒன்றாகும். அந்த அரசின் தலைவராக ஜனாதிபதி இருக்கின்றார். இவர் இவரது அமைச்சர்களை நெறிப்படுத்த  வேண்டிய பொருப்புடையவர். தமது அமைச்சரவையில் உள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த முஸ்லிம்களின் விடயத்தில் மிகவும் கடுமையாக செயற்படுவதை அண்மையில் அவரை மேற்கோள் காட்டி வெளிவந்த எத்தனையோ அறிக்கைகளை நாம்  கூறலாம்.

இந்த அமைச்சரது செயற்பாட்டை அவரது தனிப்பட்ட கருத்து என்று எவ்வாறு அரசாங்கத்தால் கூறமுடியும். அமைச்சரவையில் பல்லின சமூகத்தை சேர்ந்த பிரதி நிதிகள் இருப்பார்கள் அவரது மொழி, மதம், கலாசாரம், மறியாதை என்பவைகளை பேணி ஒழுகுவது மற்றைய அமைச்சர்களின் பன்பாக இருக்க வேண்டும். அது தான் கூட்டுப் பொருப்பாகும். இது இவ்வாறு இருக்கும் போது, அமைச்சர் சம்பிக்க ரணவணக்க அப்பொருப்பில் இருந்து மீறியுள்ளதை ஜனாதிபதி கண்டுக் கொள்ளாமல் இருப்பது ஆழமான ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களின் மத அமைப்பான அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபையினை இலக்கு வைத்து பொதுபலசேனா ஆரம்பித்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலைய மீதான தாக்குதல், பள்ளிவாசல்களின் மீது நடத்தப்படும்  தாக்குதல் என்பன நீண்டு கொண்டே போகின்றது. இதற்கு எதிராக செயற்படுவது என்பது முஸ்லிம்களுக்கு இலகுவான காரியமாகும். ஆனால் பொருமையினைக்  கொண்டும், இறை பிரார்த்தனையினை கொண்டும் அமைதியாக நாட்டினதும், சமூகங்களினது உறவினை கருத்திக் கொண்டும் இருப்பதை பொது பலசேனா அமைப்பு முஸ்லிம்களை கோழைகள் என்று தப்புக்கணக்கு போட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகின்றது.

srilanka_0308[1]

ஆட்டைக்கடித்து , மாட்டைக்கடிக்கும் நிலைக்கு சிங்கள கடும் போக்கு பொது பல சேனா மாறிவிட்டது. இலங்கையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய பொருப்பு அரசுக்குள்ளத போன்று பாதுகாப்பு தரப்புக்கும் உள்ளது. ஆனால் பொது சேனா விடயத்தில் அவைகளெல்லாம் வெறும் வெற்றுத் தோட்டாக்களாக மாறிவிட்டது. எத்தனையோ பிரதேசங்களில் பொது பல சேனாவின் அச்சுறுத்தல் சம்பவங்கள் இடம் பெற்ற போதும், அது குறித்து முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும், துரதிஷ்டம் சட்டத்தின் கைகளுக்கோ விளங்கிடப்பட்டுள்ள நிலையினையே உள்ளது.

முஸ்லிம்களை பொறுத்த நிலையில் எவர் எந்த தடைகளை கொண்டுவந்த போதும். அனுமதிக்கப்பட்ட ஹலால் உணவையே உட்கொள்வதை கைவிட மாட்டார்கள் என்பது உறுதியான விடயமாகும். இந்த நிலைக்கு தொடர்ந்து குந்தகம் ஏற்படுத்துவதும், அதற்கெதிராக பலசேனா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஏராளம்.

நேற்று வெள்ளிக்கிழமை  தெமட்ட கொட பிரதேசத்தில் கொழும்பு மாநகர சபையினால் மாடுகளை அறுப்பதற்கென வழங்கப்ட்ட இடத்திற்குள் அத்துமீறி நுழைந்த பொது பலசேனா சட்டத்ததை கையில் எடுத்துக் கொண்டு, கெக்கிராவ பிரதேசத்தில இருந்து உரிய முறையில் பாதுகாப்பாக பொது சுகாதார அதிகாரியின் அனுமதியுடன் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை மாட்டிறைச்சியை அதனை விற்பனை செய்யவிடா வகையில் ஆர்ப்பாட்டம் செய்து, பெரும் கலவரமொன்றை ஏற்படுத்தினர்.

அப்போது அங்கு வந்த பொலீஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் இவை உரிய முறையில் சுகாதார நடைமுறைக்கமைய  பாதுகாப்பான முறையில் கொண்டுவரப்பட்டதாகவும்இ, பொது பல சேனா அமைப்பினர் இங்கிருந்து செல்லுமாறும், இல்லாதவிடத்து எமது பணிக்கு இடைஞ்சல் விளைவித்த காரணத்தால் முறைப்பாடு செய்ய நேரிடும் என்று முறையிட்டுள்ளனர். இப்போதும் அவர்களது நெருக்குவாரங்கள் நின்றபாடில்லை.

இதனையடுத்து அவ்விடத்திற்கு பொறுப்பாக இருந்த வைத்தியர் கொல்வின் அவர்கள், காவி உடை தரித்த மதகுரு என்பதால் மீண்டும் ஒருமுறை தங்களுக்கு அறிவுறுத்துவதாகவும், இல்லாத விடத்து கடும் நடவடிக்கையொன்றை எடுக்க நேரிடும் என்பதை வலியுறுத்தினார். அதனையடுத்து பொலீஸார் காவி உடை கடும் போக்கு பலசேனாவை விரட்டியடித்துள்ளனர்.

சிறுபான்மை சமூகத்தினருக்க எதிராக அதிகரித்து வரும் இவ்வாறன துவேஷ செயற்பாடுகள் நாட்டின் சமாதானத்திற்கு பங்கம் விளைக்கும் ஒரு பொரிய காரணி என்பதை ஏன் இந்த ஆட்சியாளர்கள் உணராமல் இருக்கின்றனர். இந்த காரணங்களை காட்டி பொது மக்களின் இருப்புக்களுக்கு அச்சுறுத்தல் விடப்படுவதால் இவர்களை கைது செய்து சட்டத்தின் முறுத்த முடியுமல்லவா?

இதனை செய்யாமல் முரண்பாடுகளை தோற்றுவித்து அதில் உடன்பாடு காண வேண்டும் என்ற ஏற்றுக் கொள்ளப்பட முடியாத கோற்பாட்டை கூறிவருவதில் என்ன பலனிருக்கின்றது. விடை தெரியாத கேள்விகளால் குழம்பி போயிருக்கும் இலங்கை தேசத்தின் மக்களுக்கு இனவாதிகளின் பின்னணியில் சர்வதேசத்தின் கைகள் உள்ளதை விளங்கிக் கொள்ளமுடியாத அளிவில் இந்த அரசு இருக்கின்றதா. அல்லது இலங்கை நாட்டில் சர்வதேச சக்திகளுக்கு இரகசியமான ஊடுறவல்களுக்கு அரசாங்கம் தான் வழியேற்படுத்தி கொடுத்து பிள்ளையினையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுகின்றதா என்பது புரியாத அந்தரங்கமாகவே உள்ளது.

Published by

Leave a comment