‘றிஸானா நபீக் ஒரு தேசத்தின் புதல்வி’ புத்தகம் மற்றும் இறுவட்டு வெளியீடு

– பழுளுல்லாஹ் பர்ஹான்

This slideshow requires JavaScript.

காத்தான்குடி மீடியா போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட றிஸானா நபீக் ஒரு தேசத்தின் புதல்வி’ எனும் புத்தகம் மற்றும் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் றிஸானா நபீக்கின் தாயார் மற்றும் குடும்பத்தினர், காத்தான்குடி ஹைறாத் வித்தியாலய அதிபர் அஜீரா கலீல்தீன், காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன், றிஸாலா வானொலி பணிப்பாளர் கபீர் எம் ஹஸன் மற்றும் அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இரு அமர்வுகளாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பெண்களுக்காக பிற்பகல் 04.00 மணி தொடக்கம் மாலை 06.00 வரை முதலாவது அமர்வு  இடம்பெற்றது.

இதன்போது ‘றிஸானா நபீக் ஒரு தேசத்தின் புதல்வி’ நூலின் முதல் பிரதி மற்றும் இறுவட்டு என்பவற்றை றிஸானாவின் தாயாருக்கு காத்தான்குடி ஹைறாத் வித்தியாலய அதிபர் அஜீரா கலீல்தீன் வழங்கி வைத்ததுடன் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி முஸ்தபா தலைமையுரை நிகழ்த்தியதுடன் சிறப்புரையை மௌலவி மின்ஹாஜ் (இஸ்லாஹி) அறிமுகவுரையை விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம்.பைறூஸ் ஆகியோர் நிகழ்த்தியதோடு இரண்டாவது அமர்வு இன்று இரவு ஆண்களுக்காக இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில காத்தான்குடி முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். நூர்தீன் உட்பட முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினர்கள், பெருமளவிலான பெண்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment