கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் வெளியிடப்படும் தொடர்ந்தேச்சையான அறிக்கை எமக்கு கவலை தருகின்றது: ஹூனைஸ் பாருக்

 hunais-mp[1]– இர்ஷாத் றஹ்மத்துல்லா

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால்  வெளியிடப்படும் தொடர்ந்தேச்சையான அறிக்கை எமக்கு கவலை தருகின்றது.

விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய போது இவரும் ஒரு ஆயுதக் குழுவின்  உறுப்பினராக இருந்தார். இவர்களால் வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சம்  முஸ்லிம்களும் பட்ட துன்பங்களும், துயரங்களும், கஷ்டங்களும் இன்னும் தீராத நிலையிலும், இந்த 22 வது ஆண்டிலும் பொறுமையாக இருந்ததுடன், தற்போதைய சமாதான சூழலையடுத்து தமது சொந்த மண்ணுக்கு முஸ்லிம்கள் மீளக் குடியமர வருகின்ற பொழுது அதெற்கெதிராக  செயற்படுவதை இனியும் பார்த்துக் கொண்டு பொறுமை காக்க முடியாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்  எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்துள்ளதாவது –

வடக்கில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற இந்திய வீடமைப்பு திட்டத்தில் வடமாகாண முஸ்லிம்கள் உள்ளடக்கப்பட கூடாது என்று கூறி அவரே தலைமை தாங்கி ஆரப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்து நடத்தினார். அதே போல் வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேறுகின்றார்கள், அவர்கள் வாழாத இடங்களில் மீள்குடியமர்த்தப்படுகின்றார்கள் என்ற அப்பட்டமான பொய்ப் பிரச்சாரங்களை உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு பிழையான செய்திகளை வழங்கி அதன் மூலம் பிரசாரங்களை செய்து வருகின்றார்.

இவ்வாறான பொய் பிரசாரங்களால் வடமாகாண முஸ்லிம்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். இவ்வாறான ஈனத்தனமான பிரசாரத்தை அவர் நிறுத்த வேண்டும என கேட்டுக் கொள்ளவிரும்புகின்றேன். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதனை பேசி விளங்க வைக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். இல்லாத விடத்து அவர் முஸ்லிம் மத தலைவர்களுடன், கிராம, பிரதேச செயலளார்கள் மற்றும் அரசாங்க அதிபருடன் கேட்டு தெளிவை பெறவேண்டும் என்ற ஆலோசனையினையும் முன் வைக்க விரும்புகின்றேன்.

உறங்குவது போன்ற பாசாங்கு செய்யும் நபரை எழுப்ப முடியாது என்ற பழமொழிக்கு ஒப்பவே பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அறிக்கைகளை நாம் கானுகின்றோம். வங்குரோத்து நிலையில் உள்ள தமது அரசியலை இருப்புக்கு முட்டுக் கொடுத்து அதிலிருந்து அரசிலை செய்யலாம் என்ற நப்பாசையில் தொடர்ந்தேச்சையாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சிந்தனையினை கக்கிகொண்ட இருப்பது மட்டுமல்லாமல், இன உறவை பேணி வாழந்து வரும் இரு சமூகங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்திஇமற்றுமொரு இனவாத யுத்தத்தை ஆரம்பிக்கும் அநியாயத்தையும் இவர் செய்து வருவதானது, சமாதானத்தையும், ஒற்றுமையினையும் வேண்டி நிற்கும் மக்களுக்கு பேரிடியாக அமையும். இவ்வாறான மலினத்தனத்தமான செயலை அவர் நிறுத்த வேண்டும்.

வவுனியா மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழாத எந்த கிராமத்தில் முஸ்லிம்கள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள், அதே போல் அவர்களுக்கு எங்கு காணிகள் அத்துமீறி வழங்கப்படுகின்றது என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா என கேட்கவிரும்புகின்றேன். அதே போல் முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்து கிராமங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளும், பதிவுகளும் அரசாங்க அதிபர் பணிமனையில் உள்ளது.

அரசாங்க அதிபர் அவர்கள் முழுமையான காணி விபரங்களை ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இது பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கின்ற போதும், அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றி, பொய் கூறி அவர்களுக்கு கிடைக்கும் உதவிகளை பெற விடாமல் தடுக்கும் அநியாயத்தை செய்வதிலிருந்து அவர் விலக்கிக் கொள்ள வேண்டும். அதே போல் மன்னார் மாவட்டத்திலும் முஸ்லிம்கள் வாழந்த பல கிராமங்கள் இன்று தமிழ் மக்களின் வாழ்விடமாகமாறியுள்ளது.அதற்காக வேண்டி அந்த சகோதர தமிழ் மக்களை நாம் அங்கிருந்து வெளியேற்றவோ, அல்லது அவர்களுக்கு எதிராகவோ எந்த ஆர்ப்பாட்டங்களையும் செய்யவில்லை.

முஸ்லிம்களின் காணிகளையும் கடற்படையினர் பாவனைக்கு எடுத்துள்ளனர். இதனால் முஸ்லிம்களும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.20 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் தமது மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.இதன் பிறகு 2005 ஆம் ஆண்டளவில் காணி உறுதிகள் வழங்கப்பட்ட போதுஇமுஸ்லிம்களுக்கு அது வழங்கப்படவில்லை.அக்காலத்தில் 80 ஆயிரம் தமிழ் மக்களுக்கு வடமாகாண சபை ஊடாக காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.குறிப்பாக முஸ்லிம்கள் வாழ்ந்த பல கிராமங்கள் புதிய தமிழ் கிராமங்களாக மாறியுள்ளன.அதனை நாங்கள் விமர்சிக்க வில்லை.எமது மக்களும் வாழ்வதற்கு இடம் தாருங்கள் என்று தான் அதிகாரிகளிடத்திலும், அரசாங்கத்திடத்திலும் கோறிக்கை விடுத்துவருகின்றோம்.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விடய்ஙகளை தெரிந்து கொண்டும், பழைய அவர்களது செயற்பாடுகளை மறந்த நிலையிலும், வேறு மாட்ட மக்கள் புதிதாக வடமாகாணத்தில் வந்து குடியேறுகின்றார்கள் என்ற பிழையான, பொய்யான புரலிகளை கிழப்பிவிட்டுள்ளார். முஸ்லிம்கள் பெரும்பைான்மையாக எட்டு மாகாணங்களில் செறிந்து வாழ்கின்றனர். அவர்களுக்கு எவ்வித தேவையும் இல்லை தான் வாழ்ந்த பிரதேசங்களை கைவிட்டு விட்டு இங்கு வந்து குடியேறுவதற்கு என்பதை சொல்லி வைக்கவிரும்புகின்றேன். வடமகாண முஸ்லிம்களின் தாயக பூமி வடமகாணம் என்பதால் இங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இங்கு வந்து குடியேற வேண்டும்.

அதற்காக வெளி மாவட்டத்தை சேர்ந்த எந்தவொரு நபரையும் நானோஇஎமது தலைமைத்துவமோ செய்யவுமில்லைஇசெய்யப் போவதுமில்லை எவர் அதனை செய்வாராக இருந்தால் அதற்கெதிராக நடவடிக்கையெடுக்கவம் அஞ்சப் போவதுமில்லை என்பதை பகிரங்கமாக கூறிக்கொள்ளவிரும்புகின்றேன். முஸ்லிம் தமிழ் கலவரத்தை துாண்டும் வகையிலும்இகடந்த 22 வருடங்களான இந்த யுத்தத்தை தீணிபோட்டு வளர்த்த சிவசக்தி ஆனந்தன் போன்ற அரசியல் வாதிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையிலும்இமுஸ்லிம் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியினை அபகரிப்பதாக அர்த்தமற்ற அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பதை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.

5 பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி குழுவின் தலைவராக நான் செயற்பட்டவருகின்றேன். அந்த பிரதேசங்களில் காணியற்ற பல தமிழ் குடும்பங்களுக்கு காணி வழங்குவதற்கான அனுமதியினை பிரதேச அபிவிருத்தி குழுவின் ஊடாக வழங்கியுள்ளேன். தமிழ் மக்களுக்கு அரை ஏக்கருக்கு அதிமான காணிகளும் வழங்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட் விரும்புகின்றேன். காணிகள் இல்லை என்று வருகின்ற மக்களுக்கு வன்னி மாவட் அபிவிருத்தி குழுவின் தலைவராக இருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள், இம்மக்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

அவ்வாறு உண்மையாகவே காணிகள் கிடைக்காத மக்கள் இருப்பார்கள் என்றால் அது குறித்தும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதனையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கையெடுக்க முடியும். இந்த நடை முறையினை செய்யாமல்  இப்பிரதேசத்தில் இல்லாத தமிழ் மக்களையும், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அரச எதிர்பாளர்களையும் வாகனங்களில் அழைத்து வந்து ஆர்ப்பாட்டங்களை செய்து பிரதேச தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை சித்தரிக்கும் நாடகத்துக்கு வன்னி மாவட்ட தமிழ் பேசும் மக்கள் முற்றுப் புள்ளி வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் சுட்டிக்காட்டியுள்ளார்.

Published by

Leave a comment