பழுளுல்லாஹ் பர்ஹான்

கடந்த 2011-11-26ம் திகதி சேதப்படுத்தப்பட்டதையடுத்து காத்தான்குடி குட்வின் சந்தியில் அமைந்திருக்கும் கடைத்தொகுதிகள் காத்தான்குடி நகரசபையினால் சேதப்படுத்தப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்படவிருந்த போதிலும் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் வழக்கிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியாக தள்ளுபடி செய்யப்பட்டதாக காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மாப் பள்ளிவாயல் தலைவரும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவருமான மர்சூக் அஹமட் லெப்பை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்


மட்டக்களப்பு காத்தான்குடி குட்வின் சந்தியில் அமைந்திருக்கும் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மாப் பள்ளிவாயலுக்குச் சொந்தமான கடைத்தொகுதிகள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளரினால் சட்டவிரோதமானவை என சுட்டிக்காட்டப்பட்டு கடந்த 2011-11-26ம் திகதி சேதப்படுத்தப்பட்டதையடுத்து முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மாப் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து கடந்த 15மாதங்களாக வழக்கு இடம்பெற்று வந்தது.
இதற்கான இறுதித் தீர்ப்பு வழங்கும் நாள் இன்று எவ்வித காரணமும் தெளிவாக கூறப்படாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை எமது சட்டத்தரணிகள் சகிதம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது வழக்கை எடுத்துக் கொண்ட நீதிபதி
சிவபாதசுந்தரம் வழக்கை தள்ளுபடி செய்ததுடன் அதற்கான விபரங்கள் அடங்கிய ஆவணத்தை இதுவரை ஒப்படைக்கவில்லையெனவும் விiவில் எங்களிடம் ஒப்படைப்போம் எனவும் தெரிவித்தார்.
வழக்குத் தள்ளுபடி செய்தும் அது தொடர்பிலான ஆவணம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்படாததால் அது சம்பந்தமாக கொழும்பு மேல்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பில் எமது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசிக்க முடியாதுள்ளதாகவும் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மாப் பள்ளிவாயல் தலைவரும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவருமான மர்சூக் அஹமட் லெப்பை மேலும் தெரிவித்தார்.
குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து காத்தான்குடி குட்வின் சந்தியில் அமைந்திருக்கும் கடைத்தொகுதிகள் மீது காத்தான்குடி நகர சபைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment