–அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு-
பொதுக் கூட்டங்களில் சிலர் கூறித்திரிவதைப் போன்று 2014ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படமாட்டாது எனவும் அத்தேர்தல் உரிய காலத்தில் உரிய முறையில் நடத்தப்படும் எனவூம் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு தகவல் ஊடக அமைச்சில் இன்று (28) பிற்பகல் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
எஞ்சியூள்ள மூன்று மாகாணங்களுக்கும் 2013 ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெறும். 2014இல் எந்தத் தேர்தலும் நடைபெறாது என்றும் அமைச்சர் கூறினார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment