
பழுளுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு வின்சனட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று வின்சனட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் அதிபர் திரு. ஆர். கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண தபால் அலுவலக செயலாளர் கே.கனகசுந்தரம், மட்டக்களப்பு வலயக்கல்வி உதவிப்பணிப்பாளர் எம். சச்சிநானந்தன் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை மாணவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் அதிதிகள் உரை, மாணவிகள் பேச்சு, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறின.
Leave a comment