ஹலால் எதிர்ப்பு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 6 மாதங்களுக்குள் ஹலால் முத்திரைக்கு இலங்கையில் ஆபத்து ஏற்பட்டு, இன்று முஸ்லிம்களின் உரிமைகளில் ஒன்று களையப்பட்டிருக்கின்றது.
இதற்கிடையில் ஹலால் பிரச்சினை பேசித் தீர்க்கப்படாத அல்லது இதுவரையில் சுமூகமான முடிவொன்று எட்டாத நிலையில் தற்பொழுது மீண்டும் பள்ளிவாயல்கள் மீது இலங்கையின் பேரினவாதக் குழுக்கள் தங்களது சேஷ்டைகளைக் காண்பித்து வருகின்றனர்.
நேற்றிரவுகூட கேகாலை பள்ளிவாயல் தாக்கப்பட்டதாக வீரகேசரி பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது.
ஒவ்வொரு பொழுதுகளும் விடிகையில் அவை ஏதேனும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய பொழுதுகளாக விடிவதையே கடந்த சில நாட்களாக இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் சாப்பிடுவதற்கு மாத்திரம் ஹலால் பற்றி சிந்திக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சமூகம் எதிர்நோக்கம் இக்கட்டடான இந் நிலைக்கு துணிந்து குரல் கொடுப்பதற்கு பதிலாக, குரல்வளை அறுக்கப்பட்ட செத்த பிராணிகளாக பாராளுமன்ற ஆசனங்களில் எமது சமூகத்தின் தலைமை மடிந்து கிடக்கின்றது.
தேர்தல் மேடைகளில் ‘அல்லாஹூ அக்பர்’ முழக்கத்துடன் குர்ஆனையும் ஹதீஸையும் பணயம் வைத்து பெற்ற மக்களின் வாக்குகளுக்கு இவர்கள் தரும் உரிமைகள்தான் வாய் மூடி மௌனித்திருப்பது.
நாளை என்ன நடக்குமோ என்பது தெரியாது! வாய் மூடி மௌனிப்பதால்தால் எங்களது சமூகம் இன்று குரல்வளை அறுந்து கிடக்கின்றது. விஸ்வரூபத்திற்கு எதிராக குரல்கொடுத்தவர்களின் குரல்வளையும் அறுந்துவிட்டது போலவே தெரிகிறது.
எங்களது உரிமை பிரச்சினைகளை நாங்கள் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். இது ஒரு நபரின் தனிப்பட்ட பிரச்சினையல்ல! அல்லது ஒருவரின் வியாபாரமும் அல்ல!
எனவே இந்த அரசியல்வாதிகள் பதவிக்கு ஆசைப்பட்டு வாய் திறக்கப்பபோவதில்லை. இவை கடந்த கால உண்மை.
எனவே முஸ்லிம் சமூகத்தலைவர்கள், அமைப்புக்கள், பள்ளிவாயல்கள் ஒன்றிணைந்து, இலங்கை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்தப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் உரிமையில் கைவைப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது காலத்தின் தேவை.
எங்களுக்கு இஸ்லாமிய நாடு இருக்கின்றன. அவர்கள் குரல் கொடுப்பார்கள் என்றெல்லாம் தப்புக் கணக்கில் பலர் அசட்டுத் தைரியமாக இருப்பது வெட்கப்படவேண்டியது. பர்மாவில் கொழுந்துவிட்டெரிந்த முஸ்லிம் உயிர்களுக்கே குரல் கொடுக்காத இவர்கள் எப்படி எங்களுக்குக் குரல் கொடுக்கப் போகின்றனர் என்பதை சிந்திக்க வேண்டும்.
இந்த உரிமை மீறல்கள் தற்போது உரிய சமூகத் தலைவர்களால் தடுத்து நிறுத்தாது போனால் பாரிய உயிர் இழப்புக்களை இந்நாட்டில் மீண்டும் சந்திக் நேரிடும் என்பது கசப்பான உண்மை.
![pMAT1-14734519enh-z6[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/02/pmat1-14734519enh-z61.jpg?w=150&h=150)
Leave a comment