அபாய விளிம்பில் இருக்கும் அநாதை நிலையத்துக்கான உதவி கோரள்

muslimaathஅஸ்ஸலாமு அலைக்கும்

தெஹிவளையில் அல் முஸ்லிமாத் என்ற பெண்கள் அமைப்பு, பெண்களுக்கான ‘தாருள் நுஸ்ரா’ என்ற அனாதை நிலையத்தை தனிப்பட்டவர்களின் நன்கொடைகள் மூலம் அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாக கொண்டு நடாத்தி வருகிறது.
 
அரசின் சமீபத்திய சட்டதிட்டங்களுக்கு அமைய இதனை தொடர்ந்து நடாத்துவதற்கு இவர்களுக்கு சொந்த கட்டடம் தேவைப்படுகிறது. வாடகை கட்டிடத்தில் நடாத்த தற்காலிக சலுகை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வெகுவிரைவில் அரசாங்கத்தினால் இதனை மூடச்சொல்லும் அபாயமும் உள்ளது.
 
இதனால் இவர்கள் ஒரு கட்டிடத்தை சொந்தமாக வாங்க நிதி சேர்க்க ஆரம்பித்து உள்ளார்கள்.

தற்பொழுது இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்நிலையம் மூடப்படக்கூடிய அபாயம் இருக்கின்றது.

ஆர்வமுள்ள சகோதரர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ள உரிய அமைப்பின் கடித முலமான தகவல்களுக்கமைய உரியவர்களுடன் தொடர்பு கொண்டு தங்களால் முடியுமான உதவிகளை செய்யுமாறும் கேட்கப்படுகின்றது.

-மின்னஞ்சல்: மடவளை நியூஸ்

mulimath

Published by

Leave a comment