விளையாட்டுப் போட்டிகளில் குறிப்பாக மெய்வல்லுனர் போட்டி களில் பங்குபற்றும் மாணவ, மாணவியர் அவர்கள் அப்போட்டிகளில் கலந்துகொள்வதற்கு முன்னர் அவர்களின் உடல் நிலையை பரிசோதனை செய்து உடல்நிலை சீராக இருக்கிறது என்ற மருத்துவ சான்றிதழை பெறுவது அவசியம் என்றும் அதன் பின்னரே பாடசாலை மாணவ, மாணவியர் விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார்.
சமீபத்தில் மெய்வல்லுனர் போட்டிகளில் அதுவும் 5 கிலோமீற்றர் மரதன் ஓட்டப் போட்டிகளில் கலந்துகொண்ட சிலாபத்தைச் சேர்ந்த ஒரு மாணவியும், கேகாலையைச் சேர்ந்த இன்னோர் மாணவியும் ஓடிக் கொண்டிருந்த போதே மாரடைப்பினால் மரணித்த வேதனைக்குரிய சம்பவங்களுக்குப் பின்னரே ஜனாதிபதி அவர்கள் இந்தப் புதிய பணிப்புரையை கல்வி அமைச்சுக்கு விடுத்துள்ளார்.
சிலாபம் தேசிய கல்லூரியின் கலைப்பிரிவு மாணவியான 19 வயது கெளசல்யா பவித்ராணி, ஜனவரி மாதம் 31ந் திகதியன்று நடந்த மரதன் ஓட் டப்போட்டியில் கலந்துகொண்டபோது வீதியில் விழுந்து மரணித்தார். சிலாபம், குருநாகல் வீதியில் மல்வத்தைச் சந்தியில் இருந்து சிலாபம் ஆனந்த தேசிய கல்லூரி வரை 5 கிலோமீற்றர் தூரத்தை சேதவத்தை ஊடாக ஓடி வந்த போது நெஞ்சு வலியால் மரணித்தார்.
கேகாலை அறநாயக்க றிவிசந்த மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் 5000 மீற்றர் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. உயிரிழந்த மாணவி அப்பாடசாலையின் உயர்தர வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார். 18 வயதான இவரது பெயர் ஹாசினி அனுஷா குமாரவாகும்.
இவ்விரு மாணவிகளுக்கும் ஏற்கனவே, இருதயத்தில் உள்ள சுவாசக் குழாய் சிறிதாக இருந்ததினால் இருதய நோயாளிகளாக இருந்தவர்கள் என்று மரண விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இவர்களை விட பெரும்பாலான அரசாங்க பாடசாலைகளின் மாணவ, மாணவியரு க்கு பெற்றோரின் வறுமை காரணமாக போஷாக்குணவை உட்கொள் ளும் சந்தர்ப்பம் பெரும்பாலும் கிடைப்பதில்லை.
மெய்வல்லுனர் போட்டி, உதைப்பந்தாட்டம், கிரிக்கெட், கரப்பந்தாட்டம், நீச் சல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடும் பிள்ளைகளுக்கு நல்ல போஷாக்குணவு கொடுக்கப்படுவது அவசியமாகும். நல்ல போஷாக் குணவை எடுத்துக் கொள்ளாமல் பல மணி நேரம் உடலை வருத்தி தேகப்பயிற்சிகளில் ஈடுபடுவோருக்கு உடல் சோர்வு ஏற்பட்டு பொது வாக மயக்கமும் ஏற்படுவதுண்டு.
இதனால் தான் பாடசாலைகளில் பல்வேறு விளையாட்டு அணிகளில் கலந்து கொள்ளும் வீர, வீராங்கனைகளுக்கு பாடசாலைச் செலவில் காலை வேளையில் பயிற்சி பெறும் போது முட்டை, பால் போன்ற போஷா க்குணவுகள் கொடுக்கப்படுகின்றன.
இவற்றிற்கு மேலதிகமாக போன்வீடா, குளுக்கோஸ் போன்ற நீராகாரங்க ளையும் கொடுத்து உடல்வலுவை பெருக்குவதற்கு பாடசாலைகள் தங் கள் பாடசாலை அணி வீர, வீராங்கனைகளுக்கு கொடுத்து வருகிறது. தேசிய ரீதியில் நாட்டை பல்வேறு விளையாட்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்துவற்கு தெரிவு செய்யப்படும் வீர, வீராங்கனைகளுக்கு விளையா ட்டுத் துறை அமைச்சு மாதம் ஒன்றுக்கு சுமார் 15,000 ரூபாவை போஷாக்குணவை உட்கொள்வதற்காக வழங்குகிறது.
அத்துடன் அவர்களின் உடல் வலுவை நல்ல நிலையில் வைத்திருப்பத ற்கு விட்டமின் போன்ற விலையுயர்ந்த மாத்திரைகளையும் விளையா ட்டுத் துறை அமைச்சு அவர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. தேசிய ரீதியில் பல்வேறு அணிகளில் இலங்கையை பிரதிநிதித்துவம் வகிக்கும் வீர, வீராங்கனைகளுக்கு கொழும்பில் தங்கியிருந்து முழுநேர பயிற்சி யில் ஈடுபடுவதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சு முழுச் செலவை யும் ஏற்றுக்கொள்கிறது.
மிகச் சிறந்த தேசிய விளையாட்டு வீரர்களுக்கு தனியார்துறையில், வங்கிகளில், பொலிஸ் படையில் அல்லது முப்படைகளில் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுத்து முழுநேரம் விளையாட்டுத்துறையில் ஈடுபடுவதற் கும் இப்போது அரசாங்கம் சகல வசதிகளையும் செய்து கொடுத்துள் ளது.
விளையாட்டுத் துறையில் ஈடுபடுவோர்களுக்கு போட்டிகளில் சிறப்புற்று சாதனைகளை ஏற்படுத்துவதில் ஆர்வம் இருப்பதனால் பலர் சட்ட விரோதமான ஊக்க மருந்துகளை இரகசியமாக எடுத்து போட்டிகளில் சாதனைகளை புரிந்து பெயரையும், புகழையும், வருமானத்தையும் பெரு க்கிக் கொள்கிறார்கள். ஒருநாள் அவர்கள் சிறுநீர் சோதனையில் தோல்வி கண்டால் சம்பந்தப்பட்டவர்கள் சட்டவிரோதமான ஊக்க மாத்திரை களை எடுத்துள்ளார்கள் என்ற உண்மை வெளிவரும்.
அப்போது அவர்களின் விளையாட்டுத்துறை வாழ்க்கையே சின்னாபின்ன மாகி சிலருக்கு 5 அல்லது 2 வருடங்களில் விளையாட்டுப் போட்டி களில் ஈடுபடுவதற்கான தடைவிதிக்கப்டும், அல்லது ஆயுள் பூராகவும் விளையாட்டில் ஈடுபட தடை விதிக்கப்படும்.
உலகிலுள்ள விளையாட்டு இரசிகர்களின் பேரபிமானத்தைப் பெற்ற அமெ ரிக்க வீராங்கனையான கறுப்பழகி மெரியேன் ஜோன்ஸ் சிட்னி ஒலிம் பிக் போட்டியில் 5 தங்கப்பதக்கங்களைப் பெற்று பாராட்டைப் பெற் றார். ஆயினும் அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண் டது வைத்திய பரிசோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அவ ரது தங்கப் பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவமான சின்னமாக நாடு திரும்பினார்.
இதனால் வெண்கலப் பதக்கத்தைப் பெற்ற இலங்கை வீராங்கனை சுசந் திகா ஜயசிங்கவுக்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெறும் வாய்ப்பு கிட்டி யது. இனிமேல் சீரற்ற உடல்நிலையைக் கொண்ட சகல மாணவ, மாண விகளும் விளையாட்டுப் போட்டிகளில் குறிப்பாக மெய்வல்லுனர் போட் டிகளில் கலந்து கொள்வதை தடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கேட் டுள்ளார்.
-தினகரன்
Leave a comment