ஹலால் சான்றிதழை அரசாங்கம் பெறுப்பேற்க வேண்டும் : அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா

halalஹலால் சான்றிதழ் தொடர்பில் எற்பட்டுள்ள குழப்ப நிலைகளுக்கு முடிவுகட்டும் வகையில் அதனை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஹலால் சான்றிதழ் விவகாரம் இன்று நாட்டில் சமூகங்களுக்கிடையே பிளவுகளைத் தோற்றுவிக்கும் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. உலமா சபை இதன் மூலமாக நாட்டில் பிரச்சினைகள் தோற்றம் பெறுவதற்கு ஒருபோதும் விரும்பவில்லை.

எனவே ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் உடனடியாகப் பொறுப்பேற்பதுடன் சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என உலமா சபை தெரிவித்துள்ளது.

-வீரகேசரி

Published by

Leave a comment