கொழும்பில் நடைபெற்ற நிறைவானதோர் நூல் வெளியீட்டு விழா

கலாபூஷணம் புன்னியாமீனின் ‘ஓர் ஈர நெஞ்சனனின் உலவியல் உலா ‘

CIMG2868[1]உளவளவியலாளரான யூ.எல்.எம்.நௌபரின் வாழ்க்கை வரலாற்றுப்பதிவுகளையும் உளவியல் அடிப்படைகளையும் உள்ளடக்கிய கலாபூஷணம் புன்னியாமீன் எழுதிய ‘ஓர் ஈர நெஞ்சனனின் உளவியல் உலா “நூல் வெளியீட்டுவிழா கொழும்பு, ஜே.ஆர்.ஜயவர்த்தனா கலாசார மண்டபத்தில் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்; மா.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மனோ வைத்திய நிபுணர் நிரோஷ் மென்டிஸ் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்.

அல்ஹாஜ் என்.ஏ.ரஷீட் சிறப்புரையையும் நூலாசியர் புன்னியாமீன் வெளியீட்டுரையையும் நிகழ்த்தியதுடன், திருமதி மஸீதா புன்னியாமீன் கவி வாழ்த்திசைத்தார்.

CIMG2868[1]உளவளவியலாளரான யூ.எல்.எம்.நௌபர் இந்த விழாவின் போது, நூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீனால், பொன்னாடை போர்த்தி ,பூமாலை அணிவித்து ,பூச்செண்டு வழங்கி கௌரவிக்கப்பட்டார் .அதனைத்தொடர்ந்து மேலும் சிரேஷ்ட பிரஜைகள் அறுவரும் கௌரவிக்கப்பட்டனர்.

எழுத்தாளரும் திறனாய்வாளருமான கே.எஸ் சிவகுமாரன் – இருமொழி வித்தகர் என்றும் ,தொழிலதிபர் ஏ.ஆர்.எஸ்.அரூஸ் ஹாஜி – மற்றும் அல்ஹாஜ் எஸ்.எம். அனீப் மௌலானா ஆகியோர் சேவைச்செம்மல் என்றும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், நவமணி பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன் இதழியல் வித்தகர் என்றும் ,பல்கலைக்கழக விரிவுரையாளரான திருமதி யமுனா பெரேரா மற்றும் ஜனாப் எம்.எஸ்.எம்.அஸ்மியாஸ் ஆகியோர் சீர்மியச் செம்மல் என்றும் பட்டம் சூட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னங்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

maseethaநாட்டின் நாலாபுறத்திலுமிருந்து பெரும் எண்ணிக்கையானோர் இவ்விழாவில் கலந்துக்கொண்டதுடன் பெரும்பாலானோர் நூலின் பிரதிகளை முண்டியடித்துக்கொண்டு வாங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்க விஷேட அம்சமாகும்.நீண்ட இடைவெளிக்குப்பின்னர் கொழும்பில் நடைபெற்ற ஒரு நிறைவான நூல் வெயியீட்டு விழாவாக இவ்விழாவை குறிப்பிடலாம்.

‘ஓர் ஈர நெஞ்சனனின் உலவியல் உலா “நூலானது , நூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீனை முகாமைத்துவப்பணிப்பாளராக கொண்டியங்கும் உடத்தலவின்னை சிந்தனை வட்டத்தின் 350ஆவது வெளியீடாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment