சாதகங்களும் பாதகங்களும்: ஓர் சிறு ஆய்வு
– MJ
புது பல சேனா இயக்கத்தின் அதி தீவிர செயற்பாடுகளால் 1434 வருடங்களாக உலக முஸ்லிம்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ‘ஹலால்’ எனும் இஸ்லாமிய அனுமதிக்கப்பட்ட-ஆகுமான உணவுகளுக்கு, பல நூற்றாண்டுகளாக இலங்கையில் வாழ்ந்து, ஹலாலைப் பேணி வரும் முஸ்லிம்களுக்கு இன்று கலங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த ‘ஹலால்’ எதிர்ப்பு விடயத்தால் இந்நாட்டில் ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை நாம் பின்வரும் பிரதான காரணிகளை வைத்து சுருக்கமாக நோக்கமுடியும்.
சாதகங்கள்:
* இலங்கையில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக வாழும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு ஓர் பாரிய வெற்றியாக அமைகின்றது.
* பாராளுமன்றத்தில் வாதிட்டு சட்டம்; இயக்க முடியாமல், நீதி மன்றம் சென்று வாதிட முடியாமல் நான்கு சுவர்களுக்குள் முஸ்லிம்களின் உரிமை நசுக்கப்பட்டிருக்கின்றது.
* முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒருவர்கூட துணிந்து கண்டிக்க முடியாமல், இத் திட்டமிட்ட உரிமை மீறலுக்கு உடந்தையாக இருக்கும் புது பல சேன அமைப்புடன் பேச முடியாமல், வாய் மூடி மௌனம் காத்ததானது, அல்லது அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து ஹலால் உரிமை பறிபோவதைத் தடுக்க முடியாமல் போனதானது இந்நாட்டின் அரசாங்கத்துக்கும் பேரனவாதிகளுக்கும் முஸ்லிம்கள் மீதான எதிர்கால உரிமை விடயங்களில் மென் மேலும் கைவைப்பதற்கு வழி காட்டியதாக அமைகின்றது.
* தனது பதவிக்கும், புகழுக்கும் பின்னரே இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்கள் அவர்களின் சமயத்தையும் கலாச்சாரத்தையும் மதிப்பதை தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
* முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தனது பதவியை இஸ்லாத்துக்காக இராஜினாமா செய்திருந்தால் அரசு ஆட்டங்கண்டிருப்பதுடன், இந்நாட்டு முஸ்லிம்களின் உரிமைகளில் இவ்வாறான மதவாத அமைப்புக்கள் கைவைப்பது தடுக்கப்பட்டிருக்கும். சாத்தியப்பட முடியாததால் பெரும் சாதகங்களில் ஒன்றாக இவற்றையும் எடுக்கலாம்.
ஏனெனில் தேர்தல் காலங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் இஸ்லாத்தை அடிப்படையாக வைத்தே பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.
பாராளுமன்ற ஆசனங்கள் அரசியல்வாதிகளின் சொந்த தொழில் அல்ல! மக்கள் ‘வாக்கு’ எனும் தங்களது வாக்குச் சீட்டை இவ் அரசியல் வாதிகளுக்கு முதலிடுகின்றனர்.
எனவே பட்டம் பதவிகளுக்காக தொடர்ந்தும் எமது அரசியல்வாதிகளின் மௌனம் முஸ்லிம் சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல!
![srilankan025[2]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/02/srilankan02521.jpg?w=300&h=232)
எங்களுக்கு முன் எப்படித்தான் அரசாங்களம் இரட்டைவேடம் போட்டாலும் செய்வதை, அவர்களின் நோக்கத்தை அவர்கள் கச்சிதமாக நிறைவேற்றி விட்டனர்.
பாதகங்கள்:
* பெரும்பான்மை சமூகத்தால் உற்பத்தி செய்யப்படும் உணவு, குளிர்பான மற்றும் மருந்துப் பொருட்களின் விற்பனையில் பாரிய வீழ்ச்சிகள் ஏற்படும்.
உதாரணமாக இதுவரை ஹலால் முத்திரையுடன் விற்பனைக்கிருந்த இறைச்சி வகைகள், வெளிநாட்டு உணவகங்கள், பிஸ்கட் மற்றும் மருந்துப்பொருட்கள் அதாவது சமஹன், சித்தாலேபே போன்ற மருந்துப் பொருட்களும் விற்பனையில் வீழ்ச்சியைச் சந்திக்கும்.
இதுவரை இத் தயாரிப்புக்கள் அனைத்தும் ஹலால் எனபதாகவேதான் இருந்தன. எனவே தொடர்ந்து இவற்றை பாவிக்க முடியும் என்ற நோக்கத்தில் உயோகிப்பது பல சர்ச்சைகளை ஏற்படுத்தும். ஏனெனில் ஹலால் முத்திரை இல்லாததால் பன்றி மற்றும் ஏனைய மிருகக் கொழுப்புக்களையும் அதன் பாகங்களையும் இத்தயாரிப்புக்களில் கலக்க முடியும்.
* விமான சேவைகளிலும் உல்லாச விடுதிகளிலும் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களிலும் இதுவரை கடைப்பிடித்து வந்த ஹலால் உணவு முத்திரையுடனான உணவு பட்டியல் கேள்விக்குரியதாகும்.
இவ்வாறான நிறுவனங்களுக்கு சமைத்த உணவுகளையும் ஏனைய பொருட்களையும் விநியோகிப்பதில் பெரும்பான்மையின நிறுவனங்களே முன்னணியில் இருப்பதால், ஹலால் உணவைப் பேணும் உலக முஸ்லிம்கள் அதிருப்தியில் வேறு இடங்களை நாடிச் செல்லவேண்டிய நிலை ஏற்படும்.
இது இலங்கை முஸ்லிம்களுக்குச் சாதகமான முக்கிய காரணமாக அமையும்.
![HalalCertAustralia[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/02/halalcertaustralia1.jpg?w=211&h=300)
* ஹஜ, உம்ரா மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு விமானங்களைப் பதிவு செய்வதில் முஸ்லிம்கள் ஒற்றுமையாக செயல்படின், ஹலால் உணவின் முக்கியத்துவத்தை சிங்கள பேரினவாத குழுவான புது பல சேனவுக்கு எடுத்துக்காட்டி பாடம் கற்பிக்க முடியும்.
இதுவரை சிறிலங்கன், மிஹின் லங்கா போன்ற இலங்கைக்குச் சொந்தமான விமான சேவைகளில் ஹலால் உணவுகள் பரிமாறப்பட்டு வருகின்றன. புது பல சேனாவின் கோரிக்கைக்கு அமைய இவ் விமான சேவைகளில் ஹலால் முத்திரை அகற்றப்படமிடத்து, உலக முஸ்லிம்களின் இச்சேவையினூடான பிரயாணங்கள் கேள்விக்குரியதாகும்.
![sri lankan catering[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/02/sri-lankan-catering1.jpg?w=300&h=225)
சிறிலங்கன் கேட்டரிங் எனும் உணவு நிறுவனமே விமான சேவைகளுக்கு உணவுகளை அதிகமாக வழங்கி வருகின்றது. இந்நிறுவனம் சிறிலங்கன், செறண்டிப் மற்றும் மலேசியன் எயார் லைன்ஸ் போன்றவற்றிற்கு ஹலால் உணவுகளையும் வழங்கி வருகின்றன.
இந்நிறுவனத்தில் அதிகமாக பேரின சமூகத்தினரே வேலை செய்கின்றனர். இந்நிறுவனத்தின் பிரதம அதிகாரியாக இருப்பவர் சரத் பெர்ணாண்டோ. இவர் ஹலால் உணவுகளை வழங்குவதன் மூலம் மத்திய கிழக்கு, மற்றும் ஆசிய முஸ்லிம் நாடுகளின் பயணிகளை குறித் விமான சேவைகள் ஊடாக திருப்திப்படுத்த முடியும் என்றும் கூறி இருந்தார்.
மாறாக இலங்கைக்குச் சொந்தமான குறித்த விமான சேவைகளை இரத்துச் செய்துவிட்டு, எனைய விமானங்களில் தங்களது பயணங்களைத் தொடர வழிவகுக்கும்.
![z_p-72-Srilankan-02[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/02/z_p-72-srilankan-021.jpg?w=300&h=212)
உலகில் பிரபலமான 78 விமான சேவைகளில் ஹலால் உணவுகள் உத்தியோக பூர்வமாக பறிமாறப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
* இலங்கையில் இனக் கலவரத்தை மறைமுகமாகத் தூண்ட வழி வகுப்பதுடன், பிரிவினைகளையும் ஏற்படுத்தும்.
புதுபல சேனா நினைப்பது போல் இலங்கைக்குள் மூடி மறைக்கும் பிரச்சினையல்ல இது! ஆழம் தெரியாமல் கால் வைத்துவிட்டோம் எனும் நிலை காலம் கடந்து இவர்களுக்கு உணர்த்தும்.
எங்களுக்கு அரபு நாடுகள் இருக்கின்றன. அந்நாடுகள் எங்கள் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் எனும் எதிர்பார்ப்புக்கள் பலருக்கு இருக்கின்றன. எனினும் அவை எவ்வாறு சாத்தியப்படும் என்பது சந்தேகத்திந்குரியதே!
‘ஹலால்’ எதிர்ப்பின் பின்னர் இலங்கை சந்திக்கவிருக்கும் சாதக பாதக ஆய்வுகள் இவை. இந்த உரிமையில் ‘அஜஸ்ட்’ செய்து போவதற்கு முஸ்லிம் சமூகம் முன்வருமாயின், ஏனைய உரிமை விடயங்களில் பாரிய அபாயத்தை எமது சமூகம் எதிர்நோக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை!
Leave a comment