வெள்ளமுள்ளிவாய்கால் சுற்றுலாத்தளமாக மாறுகிறது

mullivaikal[1]தமிழீழ விடுதலை புலிகளினால் கடத்தப்பட்டு முல்லைத்தீவு, வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட Fபாரா கப்பல் தற்போது சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களிருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் இக்கப்பலை பார்வையிட்டு செல்கின்றனர்.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட இப்பிரதேசத்தில் தற்போது மக்கள் மீள்குடியேற்றப்பட்ட நிலையில் பிரதேசம் இயல்பு நிலைக்கு மாறி வருகின்றது.

இந்நிலையில், விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டிருந்த மேற்படி கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரதேசம் தற்போது சுற்றுலாத் தளமாக மாற்றப்பட்டுள்ளதுடன் அப்பகுதிக்கான மக்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை அவதானிக்க கூடியதாக உள்ளது.

(GA)

Mulli[1]

Published by

Leave a comment