
பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் கூட்டமைப்பினருக்கும் காத்தான்குடி மற்றும் அதனை சூழ அண்டியுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த தௌஹீத் அமைப்பினர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி மஸ்ஜிதுல் குபா பள்ளிவாயல் வளாகத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் கூட்டமைப்பின் தலைவர் மௌலவி நஸ்மல் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழின் பிரதம ஆசிரியரும் பிரச்சாரகருமான மௌலவி எஸ். எச். எம். இஸ்மாயில் (ஸலபி), மருதமுனை தாறுல் ஹூதா பெண்கள் அரபுக் கல்லூரி அதிபர் எம். எல். முபாறக் (மதனி), காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் கூட்டமைப்பின் செயலாளர் நாஸர் (ஜமாலி), காத்தான்குடி மற்றும் அதனை சூழ அண்டியுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள்,தௌஹீத் ஆர்வலர்கள், பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது காத்தான்குடியிலுள்ள தௌஹீத் அமைப்புக்கள் அனைத்தும் எவ்வாறு ஒரு தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுவது, சமகாலப் பிரச்சினை தொடர்பில் நாம் எவ்வாறு இருப்பதுஇமக்களுக்கு எப்படியான கருத்துக்களை முன்வைப்பது, எதிர்காலத்தில் எவ்வகையான தஃவா திட்டங்களை முன்னெடுப்பது என பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
மௌலவி எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி), எம்.எல்.முபாறக் (மதனி) ஆகியோரால் விசேட உரைகள் இடம்பெற்றதுடன் இறுதியில் கருத்துப்பரிமாற்றமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment