காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தில் புதிதாக 60 பேர் இணைவும் விசேட நிகழ்வும்

 PUSWகாத்தான்குடி சமூக மேம்பாட்டிற்கான மக்கள் ஒன்றியம் 400க்கும் மேற்பட்ட தொண்டர்களைக் கொண்டு பாரிய ரீதியில் சமூக சேவைகளை காத்தான்குடியிலும் சூழவுள்ள பிரதேசங்களிலும் மேற்கொண்டுவரும் ஓர் சமூக அமைப்பாகும்.

இவ் அமைப்பின் வளர்ச்சியிலும் அதன் சேவையிலும் இணைந்து பணியாற்ற மேலும் 60 இளைஞர்கள் தொண்டர்களாக இவ்வமைப்பில் இணைந்து கொண்டனர்.

புதிய உறுப்பினர்களை இணைத்து வரவேற்கும் விசேட நிகழ்வு 23-02-2013 அன்று இவ்வமைப்பின் தலைவர் அல்ஹாஜ் MIM ஹாரிஸ்  JP தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மூத்த உறுப்பினர்களும் ஏனைய சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டதுடன்,  இளைஞர்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து இவ்வமைப்பின் தலைவர் அல்ஹாஜ் ஹாரிஸ்  JP அவர்கள் உரை நிகழ்த்தினார். நன்றி உரை பிரதிச் செயலாளர் அவர்களால் வழங்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment