OIT
சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் நடுவராக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த தர்மசேனாவை வெளியேற்ற வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி தமிழகத்தை உலுக்கியது. இந்த புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த முடியாது என்று தமிழக அரசும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சிங்களவரான தர்மசேனா என்பவர் நடுவராக நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இன்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
Leave a comment