
பழுளுல்லாஹ் பர்ஹான்
‘மகிழ்ச்சியான வாழ்வும் வளமான தேசமும்’எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கான இஜ்திமாவொன்று காத்தான்குடி குபா ஜூம்மாப் பள்ளிவாயலின் ஏற்பாட்டிலும் அல்-ஹிக்மா நிறுவனத்தின் அணுசரனையுடன் இன்று 23.02.2013 சனிக்கிழமை காத்தான்குடி குபா ஜூம்மாப் பள்ளிவாயலில் அல்லாஹ்வின் உதவியால் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
‘மகிழ்ச்சியான இல்லம் அடிப்படைகளும் பண்புகளும்’எனும் தலைப்பில் உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழின் பிரதம ஆசிரியரும் பிரச்சாரகருமான மௌலவி எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி) அவர்களும் ‘ஈமானியப் பெண்ணும் மறுமை வெற்றியை நோக்கிய வாழ்வும்’ எனும் தலைப்பில் மருதமுனை தாறுல் ஹூதா பெண்கள் அரபுக் கல்லூரி அதிபர் எம்.எல்.முபாறக்(மதனி)அவர்களும் சொற்பொழிவாற்றிய இந்ந இஜ்திமாவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றதாக காத்தான்குடி குபா ஜூம்மாப் பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் எம். மன்சூர் தெரிவித்தார்.
Leave a comment