தென் ஆப்ரிக்காவில் தோல்வி: வீரர்களின் மனைவிகளை வீட்டுக்கு அனுப்ப பாகிஸ்தான் உத்தரவு

2526508195[1]பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 3 டெஸ்ட், இரண்டு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது.

கடந்த மாதம் 25ம் திகதி முதல் தென் ஆப்ரிக்காவில் விளையாடி வரும் பாகிஸ்தான் டெஸ்ட் அணி வீரர்களில் சிலர் மனைவியை தங்களுடன் அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் தென் ஆப்ரிக்காவுக்கெதிராக ஜோகனஸ்பர்க்கில் நடந்த முதல் டெஸ்டில் 211 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், கேப்டவுனில் நடந்த 2வது டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் அணி தோல்வி கண்டு 0–2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்வியை தொடர்ந்து அணியின் பயிற்சியாளர் டேவ் வாட்மோர் மற்றும் வீரர்கள் மீது விமர்சனம் எழுந்துள்ளது. அணியின் செயல்பாடு குறித்து ரஷித் லத்தீப், இன்ஜமாம் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மனைவியை வீட்டுக்கு அனுப்ப வீரர்களுக்கு உத்தரவு

தோல்வி எதிரொலியாக வீரர்கள் தங்களுடன் அழைத்து சென்றுள்ள மனைவியை நாட்டுக்கு விரைவில் திரும்ப அனுப்ப வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதனை அடுத்து பயிற்சியாளர் வாட்மோர் தனது மனைவியை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். வீரர்கள் உடனடியாக அனுப்பி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பத்தினர் தங்களுடன் இருப்பதால் வீரர்களின் விளையாட்டு கவனம் சிதறலாம் என்று கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தென் ஆப்ரிக்கா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது.

L/S

Published by

Leave a comment