ரொனால்டோ மீண்டும் மன்செஸ்டர் யுனைடட்டில் இணையலாம்!

-MJ

ronaldo
BY: MJ

உலகப் புகழ்பெற்ற போர்த்துக்கள் உதைப்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் தனது பழைய கழகமான மன்செஸ்டர் யுனைட்டட் இல் இணையவிருப்பதாக இங்கிலாந்து பத்திரிகைகள் தற்பொழுது தலைப்பிட்டு வருகின்றன.

2009 ஆம் ஆண்டு இங்கிலாந்து, மன்செஸ்டர் யுனைடட் கழகத்திலிருந்து வெளியேறிய ரொனால்டோ, 80 மில்லியன் பவுண்களுக்கு ஸ்பெயின் ரியல் மெட்ரிட் அணிக்கு மாறுதல் பெற்றுச் சென்றார்.

மன்செஸ்டர் யுனைட்டட் மற்றும் ரியல் மெட்ரிட் ஆகிய உலக புகழ்பெற்ற கழகங்கள் தனது கனவு கழகங்களாகவும், அவற்றில் ஏதாவதொரு கழகத்துடன் தனது விளையாட்டு வாழ்க்கைகயைப் பகிர்ந்து கொள்வதில் விருப்பமடைவதாகவும் அவர் அப்போது கூறியிருந்தார்.

28 வயதான ரொனால்டோ வாரத்திற்கு 220,000 ஸ்டேர்லிங் பவுண்கள் சம்பளமாகப் பெறுகின்றார். மன்செஸ்டர் யுனைட்டட்டிற்கு 2014 வரை அணுசரனை வழங்கும் பல நிறுவனங்களுள் ‘செவலொட்’ மோட்டார் நிறுவனமும் ஒன்றாகும்.

FergusonRonaldoGettyAlexLivesey1[1]
Ronaldo and Sir Alex Ferguison in 2009

ரொனால்டோவை ரியல் மெட்ரிட் கழகத்திலிருந்து மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்திற்கு மாறுவதற்கான ஒப்பந்த பணம் 55மில்லியன் பவுண்ஸ்கள் கேள்வியில் இருக்கின்றது. இப்பணத்தை குறித்த மோட்டார் நிறுவனம் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வென்பேர்சி, நானி, வலன்ஸியா, ரூனி போன்ற முன்னணி வீரர்களின் திறமைகளால் மன்செஸ்டர் யுனைட்டட் இங்கிலாந்து பிரிமியர் லீக் இல் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில் ரொனால்டோ மீண்டும் யுனைட்டட்டில் இணைந்தால் அசைக்க முடியாத பல வெற்றிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பல சாதணைகளைப் படைப்பதற்கும் இக்கழகத்திற்கு வழி வகுக்கும்.

ரொனால்டோ, தனக்கு கிடைத்த சிறந்த உதைப்பந்தாட்ட வீரர் விருதுக்கான 1.5 மில்லயன் யூரோ பெறுமதியான தங்க பாதணியை காஸா சிறுவர்களுக்கு அன்பளிப்புச் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment