
ஏழ்மையில் மலர்ந்து, பல கனவுகளுடன் கடல் கடந்து, மன்னிக்க மனமில்லா ஓர் தாயால் பாலைவனத்தில் உதிர்ந்த மர்ஹூமா ரிஸானா நபீக் அவர்களுக்கு நூல் மற்றும் இறுவட்டு வெளியீட்டினை காத்தான்குடி மீடியாபோரம் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருக்கின்றது.
இந்நிகழ்வு எதிர்வரும் 01-03-2013 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைகையத் தொடர்ந்து காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெறும்.
பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வில் மர்ஹூமா ரிஸானா குடும்பத்தினர் உட்பட உலமாக்கள், அரசியல் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பலரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
இந்நிகழ்வுக்கு பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


Leave a comment