பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் கரையோர வலய மீளமைப்புத்திட்டத்தின் கீழ் சூழலை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கான கொம்போஸ்ட் Bபின் (Compost Bin) இன்று காத்தான்குடி அந் நாஸர் வித்தியாலயத்திற்கு வழங்கப்பட்டது.
கரையோர வலய மீளமைப்புத்திட்ட இணைப்பாளர் ஏ. கோகுல தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு, குப்பைகளை கொம்போஸ்ட் Bபின் (Compost Bin) இல் இட்டு பயிர் வளர்க்கும் முறைகள் தொடர்பாகவும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் மாணவர் ஒருவருக்கு கொம்போஸ்ட் Bபின் (Compost Bin) வழங்குவதை படத்தில் காணலாம்.




Leave a comment