காத்தான்குடியில் வாகன விபத்து – மூவர் படுகாயம்!

accident-signவிசேட செய்தியாளர் 

காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (19.2.2013) பிற்பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி 01 அந்நாசர் வித்தியாலயத்திற்கு முன்பாக முற்சக்கர வண்டியொன்று சிறிய லொறியொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முற்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு பெண்கள், மற்றும் முற்சக்கர வண்டியின் சாரதி உட்பட மூன்று பேர் படு காயமடைந்துள்ளனர்.

இவர்கள் மூன்று பேரும் காத்தான்குடி ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் முற்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை நடாத்திவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

photo

Published by

Leave a comment