சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பொலிஸாரின் தலையீட்டால் இடைநிறுத்தம் – காத்தான்குடியில் சம்பவம்!

BY FM. FARHAN
BY FM. FARHAN

பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்’எனும் பெயரைத் தாங்கி கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் சில பேரினவாதக்குழுக்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சித்து இன முரண்பாடொன்றை திட்டமிட்டு உருவாக்கி வருவதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் எனும் துண்டுப்பிரசுரம் மூலம் இந்த இனவாதக் குழுவின் பிண்ணனி என்ன?இந்தக் குழு முஸ்லிம்களை மாத்திரம் குறிவைப்பது ஏன்?ஏன் முஸ்லிம்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகளா?பள்ளிவாசல்களில் ஆயுதப்பயிற்சி வழங்கப்படுகின்றனவா?ஹலால் சான்றிதழ் ஏன் எதற்கு?அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை விமர்சிக்க இந்தக்குழுவுக்கு யோகிதை இருக்கின்றதா? ஊடக பலத்தினால் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் இந்த காவிப்பயங்கரவாதிகளின் அனைத்து வாதங்களையும் அலசும் அறிவார்ந்த நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

இந்த நிகழ்வை பொலிஸார் தலையிட்டு இடைநிறுத்தியுத்தியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் எம்.சீ.எம்.ஸஹ்றான் மௌலவியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது இந்நிகழ்வு நிறுத்தியதற்கு காத்தான்குடியிலுள்ள பொது நிறுவனங்களோ அல்லது அமைப்புக்களோ காரணம் அல்ல.காத்தான்குடியிலுள்ள சிறு குழுவினர் விரும்பாததால் இந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது என காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்ததாக அமைப்பின் செயலாளர் எம்.சீ.எம்.ஸஹ்றான் தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஏலவே நிகழ்வு தொடர்பில் முறையாக காத்தான்குடி நகரசபைத் தவிசாளரிடம் அனுமதி எடுத்திருந்தோம். ஆனாலும், இதைப் பொலிஸார் நடாத்த விடவில்லை. காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் தொலைபேசி மூலமும் ஸ்தலத்திற்கு வருகை தந்தும் பொலிஸாருடன் பேசியும் இந்தக்கூட்டத்தை நடத்த முடியவில்லை.

இந்நிகழ்வு பிரச்சிணைகளை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல. கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் பொதுபல சேனா போன்ற சில பேரினவாதக்குழுக்கள் சிங்கள நல் மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் இன விரிசலை ஏற்படுத்த முனைகின்றனர் அது தொடர்பில் விளக்கமளிப்பதற்காகவும் இஸ்லாத்தில் ஹலால் ஏன் எதற்காக?என்பதை விளக்குவதற்குமே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததே தவிர பிரச்சினைகளை உருவாக்கும் நோக்கமில்லை என காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் எம்.சீ.எம்.ஸஹ்றான் மௌலவி தெரிவித்தார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நிகழ்வுக்கு மக்கள் வருகை தந்திருந்தும் காத்தான்குடிப் பொலிஸாரும் இரானுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

படத்தின் மேல் ‘கிளிக்’ செய்யவும்.

Published by

Leave a comment