குா்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சபையின் 26 வது வருட அல்-குா்ஆன் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவா்களுக்கான பரிசளிப்பு வைபவம்

OLYMPUS DIGITAL CAMERA
BY: Deen Firoos

 – டீன் பைரூஸ்

காத்தான்குடி குா்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சபையின் 26 வது வருட அல்-குா்ஆன் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவா்களுக்கான பரிசளிப்பு வைபவம்  (16.02.2013 சனிக்கிழமை ) இன்று காலை 09.00 மணிக்கு புதிய காத்தான்குடி நுாராணியா ஜூம்ஆ பள்ளிவாயலில்  நடை பெற்றது.

சங்கைக்குரிய ஷெய்குல் பலாஹ்  அல்ஹாஜ், மௌலவி, MA.அப்துல்லாஹ் (றஹ்மானி)  அவா்களின் தலைமையில் நடை பெற்ற மேற்படி நிகழ்வின் போது,  2012 அல் குா்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த 263 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், மதரசாக்களில் கற்பித்த முஅல்லிம்களும், முஅல்லிமாக்களும் பண ஊக்குவிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இம்முறை அல் குர்ஆன் பரீட்சையில் தோற்றிய சுமார் 735 மாணவா்களுள்  காத்தான்குடி ஹிலுரியா மதரசா மாணவன் அன்சார் அபிப் அல்தாப் 198 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினைப்  பெற்றுக் கொண்டார்.

OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment