– ஏ.ஏல்.எம். தாஹிர்

மீள்டியேற்ற அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற அதிகாரசபையின் சட்டத்தின் செல்லுபடி காலத்தை இன்னும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார்.
அதற்காக அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்கு அங்கீகாரம் கிடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் மீள்குடியேற்ற அதிகாரசபையின் சட்டத்தை திருத்தி அமைப்பதற்கான சட்டவரைவு விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மீள்குடியேற்ற அதிகாரசபையின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் ஏப்ரல் 10 ம் திகதி முடிவுற இருந்தது. எனினும் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் காணி, வீடு போன்ற பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டிய தேவை இருப்பதால் மீண்டும் மூன்று வருடங்களுக்கு நீடிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
Leave a comment