மத்தளை விமான நிலையம் மார்ச் மாதம் 18ஆம் திகதி முதல் இயங்கும். இந்த விமான நிலையத்தின் நிர்மாண வேலைகள் பெரும்பாலும் முடிவடையும் நிலையில் உள்ளதாக நேற்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விமான நிலையத்தின் நிர்மாண வேலைகள் குறித்த மீளாய்வு கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட விமானச் சேவைகள் தொடர்பான உயர் அதிகாரிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
-GA
![images[6]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/02/images6.jpg?w=283&h=178)
![mattala-airport[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/02/mattala-airport1.jpg?w=246&h=146)
Leave a comment