அவுஸ்திரேலிய எதிர்கட்சித் தலைவர் – ஜுலி பிஷப் கருத்து-
மனித உரிமை விடயங்களில் இலங்கை தொடர்பில் முழுமையாக திருப்தியடைய முடியாத போதிலும்- இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து அழுத்தங்களுக்கு உட்படுத்துவது முறையில்லை என்று அவுஸ்திரேலியாவின் எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய எதிர்கட்சித் தலைவர் ஜுலி பிஷப்- ஏ.பி.சி ஊடகத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை விடயங்கள்- மீள்குடியேற்றம்- அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கம் முற்று முழுதாக சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று கூற முடியாது.
அதன் செயற்பாடுகளில் முழுயாக திருப்தியடைய முடியாது.
எனினும் இதனை காரணம் காட்டி- இலங்கை அரசாங்கத்தை புறக்கணிக்க முனைவது- இந்த விடயங்களில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் அவுஸ்திரேலியா கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
அத்துடன் பொதுநலவாய அமைப்பின் ஏனைய உறுப்பு நாடுகளுக்கும்- இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளுமாறு அவுஸ்திரேலியா அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment