அமைச்சர் கெஹெலிய அறிவிப்பு-
ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களுடன் அமைச்சரவை மட்டத்திலான கலந்துரையாடல் ஒன்றை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் தகவல் ஊடக அமைச்சில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பி கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது:
மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கைகளுக்கு அரசு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது. பொது பல சேனாவுக்கு அரசாங்கம் நிதி உதவி அளித்துவருவதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. அதில் எதுவித உண்மையூம் இல்லை.
பொது பல சேனா உறுப்பினர்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உறுப்பினர்களையும் தனித்தனியாக அழைத்து அரசாங்கம் இது தொடர்பில் நீண்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முக்கிய அம்சங்கள் முடிந்த பின்னர் சுமார் 45 மணி நேரம் இந்த ஹலால் பிரச்சினை தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போதே அமைச்சரவை மட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி அமைச்சரவை முக்கிய உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்வர். சகல முஸ்லிம் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் மற்றும் ஏனைய பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலுக்கு அழைக்கப்படுவர் என்றும் என்றும் அமைச்சர் கூறினார்.
-GA
Leave a comment