
பழுளுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச கடற் பகுதிகளில் கடல் காற்றுடன் சற்று கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. வெளியிடங்களிலிருந்து மீன்கள் கொள்வனவு செய்யப்பட்டு இங்கு கொண்டு வருவதால் குறித்த பிரதேசத்தில் கடல் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த புதிய காத்தான்குடி பிரதௌஸ் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஐ. றியாஸ் சுமார் ஒரு வாரகாலமாக அப்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மழை மற்றும் காற்று போன்வற்றினாலேயே கடலுக்கு செல்ல முடியாதுள்ளது என அவர் கருத்துத் தெரிவித்தார்.
Leave a comment