நவநீதம் பிள்ளையின் கருத்தை ஏற்கமுடியாது!

அமைச்சர் கெஹெலிய விளக்கம்-

Keheliya[1]கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற கிடைத்த அரிய வாய்ப்பை இலங்கை நழுவவிட்டுள்ளதாக நவநீதம்பிள்ளை அண்மையில் தெரிவித்திருந்த கருத்தை ஏற்கமுடியானதென அமைச்சரவைப் பேச்சாளரும்- தகவல் ஊடகத்துறை அமைச்சருமாகிய கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் தகவல் ஊடக அமைச்சில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பி கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது:

ஐக்கிய நாடுகள் சபைக்கு மிக முக்கியமானவற்றை இலங்கை அரசு நிறைவேற்றாவிடினும் அரசாங்கத்திற்கு முக்கியமானவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறுகிய காலத் திட்டங்கள் நடைமுறைப்பட்டுத்தப்பட்ட பின்னர் இப்போது மத்திய காலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இலங்கையின் இறைமையில் வெளிநாடுகள் தலையிட நாம் அனுமதிக்கமாட்டோம். எனினும் சுயாதீன நாடு என்ற அடிப்படையில் முடிந்தவற்றை நிறைவேற்றி வருகிறோம். குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது அதற்கு அச்சமின்றி முகங்கொடுக்கத் தயார் எனவும் அமைச்சர் கூறினார்.

-GA

Published by

Leave a comment