
பழுளுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் காத்தான்குடியிலுள்ள அவரது பிராந்திய அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நேற்று இரவு 2013-02-13 இடம்பெற்றது.
இதில் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர், பிரதி தலைவர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர். இதன் போது காத்தான்குடி உள்ளுராட்சி மன்றத்திற்கான வட்டார முறை தொடர்பான எல்லை நிர்ணயம் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இதன் போது காத்தான்குடி உள்ளுராட்சியினை 12வட்டாரங்களாக பிரிப்பதற்கு ஆலோசணை வழங்கப்பட்டது.
ஆற்றங்கரையில் இருந்து பிரதான வீதிவரை ஆறு வட்டாரங்களும், பிரதான வீதியில் இருந்து பெரிய தோணாவரை இரண்டு வட்டாரங்களும், பெரிய தேணாவில் இருந்து கடற்கரைவரை நான்கு வட்டாரங்களாக பிரிப்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
இவ்விடயங்கள் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை ஆராய்வதற்காக பிரதியமைச்சரினால் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
Leave a comment