இரு காதும் கேட்காத சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்

 

BY FM. FARHAN
BY FM. FARHAN

பழுளுல்லாஹ் பர்ஹான் 

பாலமுனை-10 அஷ்ரப் வீதியில் வசிக்கும் முஹம்மது சம்றி(2வயது 04மாதங்கள்) இரு காதுகளும் கேட்காத (செவிப்புலனற்றவராக)காணப்படுகிறார். இவருக்கு சத்திர சிகிச்சை மூலம் கருவி பொருத்துவதன் மூலம் இவரை குணப்படுத்த முடியும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பல தடவைகள் பல வைத்தியர்களிடம் காட்டிய போதும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட எவ்வித சிகிச்சையும் பலனளிக்கவில்லை.இறுதியாக கொழும்பு லங்கா வைத்தியசாலையில் செவிப்புலன் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் தேவானந்த ஜாஹிடம் காட்டிய போது சத்திர சிகிச்சை மூலம் கருவி பொருத்துவதன் மூலம் இவரை குணப்படுத்த முடியும் என சிறுவனின் தந்தை குறிப்பிட்டார்.
செவிப்புலனுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தும் கருவியின் பெறுமதி ரூபா 20இலட்சம் முதல் 3 இலட்சம் வரை காணப்படுகிறது.அதனை பொறுத்துவதற்கு மேலதிகமாக மூன்று இலட்சம் ரூபா தேவைப்படுகின்றது.

குறித்த சிறுவனின் தந்தை தம்பி லெப்பை முஹம்மது றிப்கான் ஒரு அங்காடி வியாபாரியாக இருப்பதால் அவரால் அவ்வளவு பணத்தை திரட்ட முடியாதுள்ளது. செல்வம் படைத்தவர்களே! (அல்லாஹ்வின் உதவியால்)பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டவர்களே!

சுத்திர சிகிச்சையை இரண்டு மாதத்திற்குள் 17.01.2013 தொடக்கம் 10.03.2013 வரையான காலப்பகுதிக்குள் செய்வது அவசியமாக உள்ளதால் உங்களால் முடியுமான தொகையை வாரி வழங்கி அல்லாஹ்விடம் அதற்கான கூலியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

உதவி செய்ய விரும்புவோர்
டீ. எம். றிப்கான்
கணக்கு இல:- 74222240
இலங்கை வங்கி
காத்தான்குடிக் கிளை.
தொடர்புகளுக்கு,
சிறுவனின் தந்தை
தொலைபேசி இல:-0775809743

படத்தின் மேல் ‘கிளிக்’ செய்யவும்.

Published by

Leave a comment