யாழ். போதனா வைத்தியசாலையில் சுமார் மூவாயிரம் மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட வைத்தியசாலை கட்டடத் தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
ஜெய்கா நிறுவனத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நான்கு மாடிக் கட்டடத்தில் அதி நவீன வசதி களைக் கொண்ட 10 சத்திரசிகிச்சை பிரிவுகள்- 22 படுக்கைகளைக் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு- கதிர் சிகிச்சை பிரிவு மற்றும் நவீன மருத்துவ இயந்திரங்களைக் கொண்ட ஆய்வுக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளன.
-அரசாங்க தகவல் திணைக்களம்
![jaffnahospital-3[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/02/jaffnahospital-31.jpg?w=300&h=169)
Leave a comment