நாடெங்கிலுமுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் பாவனையில் இருக்கும் பாதரசம் அடங்கிய வெப்பமானி மற்றும் இரத்த அழுத்தமானி சகலதை யும் அப்புறப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாதரசம் சுற்றாடலில் சேரும்போது மிக மோசமான சுற்றாடல் மற்றும் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதால் பாதரசம் அடங்கிய சகல உபகரணங்களையும் பாவனையிலிருந்து அப்புறப் படுத்துவதற்கு முழு உலகிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தடிப்படையிலேயே இந்த நட வடிக்கையை இங்கும் முன்னெடுப்பதற்குச் சுகாதார அமைச்சு தீர்மானித்து இருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். இத்தீர்மானத்திற்கமைய பாதரசம் அடங்கிய வெப்பமானியும், இரத்த அழுத்தமானியும் அரசாங்க ஆஸ்பத்திரிகளிலிருந்து கட்டம் கட்டமாக அப்புறப்படுத்தப்படும் எனவும் அவ்வதிகாரி கூறினார்.
இந்நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யும் வகையில் விஷேட சுற்றறிக்கையொன்றை சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயத்திலக சகல மாகாண செயலாளர்களுக்கும், மாகாண சுகாதாரப் பணிப்பாளர்களுக்கும், சகல ஆஸ்பத்திரிப் பணிப்பாளர்களுக்கும், பிரதேச சுகாதார சேவைகள் பணிப் பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதேவேளை பாதரசம் அடங்கிய வெப்பமானிக்கும், இரத்த அழுத்த மானிக்கும் பதிலாக டிஜிட்டல் தொழில்நுட்பத்திலான வெப்பமானியையும் இரத்த அழுத்த மானியையும் அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் சி.எல்.எப். மின்குமிழ் களிலும் பாதரசம் அதிகளவில் காணப்படுவதால் அவற்றைப் பாவனையிலிருந்து அப்புறப்படுத்தும்போது அவை உடையாத வகையில் பாதுப்பான முறையில் அப்புறப்படுத்துமாறும் சுகாதார அமைச்சு கேட்டுள்ளது.
ரி-5 சி. எப். எல். மின்குமிழ்களுக்கு பதிலாக ரி-8 மின்குமிழ்களை பாவிக்கும் போது பாதரசம் சுற்றாடலில் சேருவதை சுமார் ஐம்பது சதவீதம் குறைக்க முடியும் எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
– தினகரன்
Leave a comment