ஜனாதிபதி அவர்களின் கருணை உள்ளத்தை புரிந்துகொண்ட வடபகுதி மக்கள் அவரை வாழ்த்தி வழியனுப்பினார்கள்

jaffnahospital-1[1]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வடபகுதிக்கான இரண்டு நாள் விஜயம் நேற்று வெற்றிகரமாக நிறைவுபெற்றது. அரசாங்கத்தின் தலைவராக யாழ் குடாநாட்டுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் தமது இரண்டுநாள் உத்தியோக பூர்வ விஜயத்தின் பின்னர் தன்னுடைய முன்மாதிரியான, தேசப்பற்றுடன் அமைந்த அணுகுமுறைகளின் மூலம் வடபகுதி மக்க ளின் இதயங்களை கொள்ளை கொண்ட ஒரு தேசத் தலைவர் என்ற உயர் அந்தஸ்துடன் நேற்று கொழும்பு திரும்பினார்.

ஜனாதிபதி அவர்கள் வடபகுதி மக்களின் உள்ளங்களை குளிரச் செய்யக்கூடிய வகையில் மனிதாபிமான பிரச்சினைகளை கனி வாக அணுகி அப்பிரச்சினைகளுக்கு மகிழ்ச்சிகரமான தீர்வை ஏற் படுத்தி மக்களின் இதயபூர்வமான பாராட்டுதலைப் பெற்றார். யாழ் மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமாக அமைச்சர்கள், அரசியல் வாதிகள், முப்படைத்தளபதிகள், உயர் அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு தலைமைதாங்கி மக் கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை ஆராய்ந்து அவற்றுக்கு உடனடியாக தீர்வை ஏற்படுத்துவதற்கான உத்தரவு களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிறப்பித்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தமிழ்ப்பெண் ஜனாதிபதி அவர்களைப் பார்த்து, ஜனாதிபதி அவர்களே, தயவு செய்து பொலிஸ் காவலில் சுமார் இரண்டு மாதங்கள் வரையில் இருந்து வரும் தனது மகனையும் தனக்கு அருகில் உள்ள பெண்மணி யின் மகனையும் தயவுகூர்ந்து விடுதலை செய்யுங்கள் என்று கண் ணீர் மல்க கேட்டுக் கொண்டார். அந்தப் பெண்மணியின் வேண்டுகோளுக்கு செவிமடுத்த ஜனாதிபதி அவர்கள் தானும் மூன்று மகன்மார்களின் தந்தை என்ற உணர்வு டன் அந்தக் கோரிக்கையை மனிதாபிமான முறையில் கையாண் டார்.

பல்கலைக்கழக பட்டம் பெறுவதற்காக நீங்கள் வளர்த்து ஆளாக்கிய உங்கள் மகன்மார் இவ்விதம் வன்முறைகளில் ஈடு படுவது நியாயம் தானா? என்று ஜனாதிபதி, அவர்களிடம் கேட்ட போது, அந்தப் பெண் ஜனாதிபதி அவர்களே, இந்த இளைஞர் கள் இருவரும் தெரியாத்தனமாக செய்த தவறை நீங்கள் மன்னி த்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இனி மேல் இவ்விருவரும் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடாதவாறு நாம் பார்த்துக் கொள்வோம் என்று உறுதியளித்த பின்னர் அந்தப் பெண் கண்ணீர் மல்க ஜனாதிபதி அவர்களே, யுத்தத்தின் போது என் மகனை வன்னிக் காட்டில் நான் பாடுப ட்டு காப்பாற்றினேன்.

என் மகனை நல்வழிப்படுத்த உதவி செய் யுங்கள் என்று கேட்டார். ஒரு தாயின் வேதனையை புரிந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள் பொலிஸ் மா அதிபரைப் பார்த்து இந்த இரண்டு இளைஞர்களை யும் அவர்களின் தாய்மாரிடம் ஒப்படையுங்கள் இனிமேல் இவ் விரு தாய்மாரும் அவர்களை நல்வழிப்படுத்துவார்கள் என்று அறி வித்தார். இவ்விரு இளைஞர்களும் நன்றாக கல்வி கற்று வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும், அவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக செயற் பட்டால் அதைப்பற்றி நான் பொருட்படுத்தமாட்டேன்.

ஆனால் அவர்கள் அனைவரும் தேசப்பற்றுடன் நாட்டுக்கு துரோகம் செய் யாமல் இருப்பதையே நான் விரும்புகிறேன் என்று ஜனாதிபதி அவர்கள் கண்டிப்பான குரலில் தெரிவித்தார். ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணத்தின் புன்னாலைக்கட்டுவன் பிர தேசத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது நெற்றி விய ர்வை நிலத்தில் சிந்த உழைத்துக் கொண்டிருந்த விவசாயிகளை பார்த்து தனது வாகனத்தை நிறுத்தச் செய்து அவர்களிடம் சென்று பேசினார். ‘எப்படி உங்களுடைய பயிர்ச்செய்கை இலாபகரமாக நடைபெறுகி றதா?’ என்று ஜனாதிபதி கேட்டபோது ஜனாதிபதி அவர்களே நாம் உற்பத்தி செய்யும் உருளைக் கிழங்கை சந்தைப்படுத்துவதில் சில கஷ்டங்களை எதிர்நோக்குகிறோம் என்று தெரிவித்தார்கள்.

அங்கிருந்து ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்க சென்றிருந்த போது அங் குள்ள அரசாங்க உத்தியோகத்தர்களைப் பார்த்து விவசாயிகள் தன க்கு தெரிவித்த விடயம் குறித்து கேள்வி எழுப்பினார். நீங்கள் இந்த விடயத்தை எனக்கு தெரிவிக்காத போதிலும் நான் சம்பந் தப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் உருளைக் கிழங்கை சந்தைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதை தெரிந்து கொண்டேன். உடனடியாக இந்த விவசாயிகளின் பிரச்சினையை நீங்கள் தீர்த்து வைக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் உத்தரவிட்டார்.

அதுபோன்றே இந்துக்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையில் நட்புறவுப் பாலமாக அமைந்திருக்கும் நயினை நாகபூசணி அம் மன் கோயிலுக்கும், நாகவிகாரைக்கும் அருகில் புதிதாக அமைக் கப்பட்டுள்ள இறங்குதுறையை ஜனாதிபதி அவர்கள் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்து, இவ்விரு வழிபாட்டுத் தலங்களிலும் இடம்பெற்ற சமய பூஜைகளில் கலந்துகொண்டார். அங்கும் ஜனாதிபதி அவர்கள் இந்து சமய மற்றும் பெளத்த சமய பக்தர்களை சந்தித்து அவர்களுடன் அன்புடன் உரையாடினார். ஜனாதிபதி அவர்கள் இந்த விஜயத்தின் போது பொது மக்களு டன் நெருக்கமாக ஒட்டுறவாடிய நிகழ்வுகளைப் பார்த்து அப்பிர தேச மக்கள் இத்தகைய தலைவர் ஒருவருக்கு நாட்டில் மக்களி டையே இன மற்றும் மத ரீதியிலான ஒருமைப்பாடும், நல்லுறவும் வலுப்பெறும் என்று மனதார பாராட்டினார்கள்.

இந்த யாழ்குடாநாட்டு விஜயம் ஜனாதிபதி அவர்கள் எத்தகைய பண் பாளர், கருணை உள்ளம் படைத்தவர், நாட்டு மக்கள் அனைவ ரையும் சரிசமமாக மதித்து நடக்கும் ஒரு நல்ல மனிதர் என்பதை வடபகுதி மக்கள் புரிந்து கொள்வதற்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.

-தினகரன்

Published by

Leave a comment