-எஃப்.எம். பர்ஹான்

காத்தான்குடி நகர சபை மற்றும் பிரதேச கலாசார நிலையம் ஆகியவற்றின் ஆதரவுடன் தேசிய தொலைக்காட்சி ஊடகங்களின் ஊடகவியலாளரும் ,நிகழ்ச்சித் தொகுப்பாளருமான எம்.எஸ்.எம்.சஜி தொகுத்த, படைப்பு, காணொளி வெளியீடும் மாபெரும் கலை நிகழ்வும் நேற்று செய்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் கா-குடி கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஜெ. ஜவாஹிர் மதனி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு காத்தான்குடி ஜம்மியதுல் உலமாத் தலைவர் அலியார் (பலாஹி), ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு வெளிடப்பட்ட படைப்பு இறுவட்டு வெளியீட்டு நிகழ்வில் உலகில் இடம்பெற்ற சாதனைப்பதிவுகள், நம்ப முடியாத திகைப்பூட்டும் காட்சிகள், அலர வைத்த அனர்த்தங்கள், கண்கலங்க வைக்கும் பேசும் படங்கள், குழந்தைகளை குஸிப்படுத்தும் குதூகலக் காட்சிகள், கா-குடி ஊர் கலைஞர்களின் பல்குரல் நிகழ்வுகள், செரண்டிப் முஸ்தபா குழுவின் நகைச் சுவை, ரம்பரே ரம்பா புகழ் அஸீஸ் மாமாவின் பாடல்களும், கலைஞர் கே.எம். அலீமின் ஓரங்க நாடகம் உட்பட இன்னும் பல சுவாரஸ்ய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
Leave a comment