– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற சகல ஆவணங்களும் அறிக்கைகளும் தமிழ்மொழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2013ம் ஆண்டுக்கான முதலாவது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நேற்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் தனது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான பொன்.செல்வராசாவிடம் நீங்களும் இங்கு உரையாற்றும் போது தமிழில் உரையாற்ற வேண்டும் ஆங்கிலத்தில் உரையாற்றக்கூடாது என அவரைப் பணித்தார்.
குறித்த அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இடம்பெறும் சகல நடவடிக்கைகளும் தமிழ் மொழியில் இடம்பெற வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மாவட்ட அபிவிருத்திக்குழுக்குட்டம் அதற்கான அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment