
சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவராக சிரேஷ்ட இராஜதந்திரி வி. கிருஷ்ண மூர்த்தியின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதென வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அஹமட் ஜவாத் இலங்கை அரசாங்கத்தினால் மீளழைக்கப்பட்டார். இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இராஜதந்திரி வி. கிருஷ்ணமூர்த்தியின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இராஜதந்திர சேவையில் 33 வருட அனுபவம் கொண்ட இவர் , தற்போது சார்க் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வருகின்றார்.
இறுதியாக சென்னையிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பிரதி உயர் ஸ்தானிகராக வி.கிருஷ்ணமூர்த்தி கடமையாற்றியுள்ளார்.
எவ்வாறாயினும் சவூதி அரேபியா -இலங்கை இரு நாடுகளுக்குமிடையில் உறவு தொடர்ந்து நீடிக்கும் என்பதில் அமைச்சு உறுதியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(GA)
Leave a comment