கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி தலைமையில் திருமலை மாவட்ட உள்ளுராட்சி சபைத் தலைவர்களின் ஒன்றுகூடல்

 

BY M. RAIS
BY M. RAIS

முஹம்மட் ரைஸ் 

உள்ளுராட்சி சபைகளில் நிருவாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஏற்படும் பிரச்சினைகள் சம்பந்தமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள திருமலை, கிண்ணியா, தம்பலகாமம், மூதூர், கந்தளாய், குச்சவெளி, மொறவௌ, வெறுகல், சேருவில, பதவிசிரிபுற, கோமரங்கடவெல, ஈச்சலம்பற்று, திருகோணமலை பட்டிணமும் சூழலும் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் இன்று கிண்ணியா நகரசபை நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணி தலைமையில் நகரசபை மணடபத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் நகரசபை தலைவர்கள் மற்றும் பிரதேசசபை தலைவர்கள் கலந்து கொண்டனர். உள்ளுராட்சி மன்றங்களில் நிலவும் பிரச்சினைகள், தீர்வு காணப்படக்கூடிய பிரச்சினைகள், முக்கியமாக தீர்வுகள் எட்டப்படவேண்டிய விடயங்கள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது. உள்ளுராட்சி சபைகள்; என்ற வகையில் அந்தந்த தலைவர்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விடயங்கள் சம்பந்தமாகவும் குறித்த நேரத்தில் உரிய மன்றத் தலைவர்கள் மூலமாக இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

நகர, பிரதேச சபை தலைவர்களின் சந்திப்பில் முக்கியமாக பெற்றுக்கொள்ள வேண்டிய தீர்வுகள் சம்பந்தமாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டது. இதன் போது கிண்ணியா நகரசபை நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணி உரையாற்றும் போது நிலவுகின்ற நாம் எதிர்நோக்குகின்ற சகல விடயங்களையும் நாம் இங்கு கலந்து பேசி முடிவுகளை எடுப்பது மட்டுமல்ல் அவற்றை உடன் பெற்றுக்கொள்வது எவ்வாறு என்பதான முடிவினையும் உடன் கண்டறிய வேண்டியுள்ளது. இதற்கு உள்ளுராட்சி மன்றத்தலைவர்கள் என்ற வகையில் எமது மக்களை சுபீட்சமாக வாழவைக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு உள்ளது.

இன்று நாம் சுதந்திர இலங்கையில் வாழ்கிறோம். இதற்கு அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அவர்களின் வழிகாட்டலில் நாம் எல்லோரும் இன, மத, கட்சி பேதமின்றி ஜனாதிபதியால் பெற்றுத்தரப்பட்ட சமாதானத்தையும் நிம்மதி வாழ்க்கையையும் தக்கவைப்பதோடு ஆசியாவின் ஆச்சர்யமிக்க நாடாக எமது நாட்டை கொண்டு செல்வதற்கு திருமலை மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் என்ற வகையில் நாம் ஒவ்வொருவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படுவதன் மூலம் ஒட்டுமொத்த நல்லாட்சி ஒன்றை ஜனாதிபதி தலைமையில் உருவாக்க முடியும் என கிண்ணியா நகரபிதா எம்.எம். ஹில்மி தெரிவித்தார். இச்சந்திப்பின் போது கிண்ணியா பிரதேச சபை தலைவர் எஸ். எல். எம். ஜவாதுள்ளா இங்கு எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு உடன்பாட்டுடன் ஜனாதிபதியை சந்தித்து இதற்கான சில தீர்வுகளை பெறவேண்டுமென தெரிவித்தார். வருகை தந்திருந்த ஏனைய உள்ளுராட்சி சபை தலைவர்களும் தமது கருத்துக்களையும் தெரிவித்தனர்.

இதன்போது திருமலை மாவட்ட உள்ளுராட்சி சபை தலைவர்களின் அமைப்பு என்ற அமைப்பையும் ஸ்தாபித்ததோடு அமைப்பின் தலைவராக கிண்ணியா நகரசபை நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணி தெரிவு செய்யப்பட்டார். அத்தோடு சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டது. குறித்த ஒன்றுகூடலில் ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வது, நிருவாக ரீதியிலான பிரச்சினை சம்பந்தமாக வருகைதந்த உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் ஒப்பமிட்ட மகஜர் ஆளுநருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்களுக்கு அனுப்புவதற்கான தீர்மானத்தோடு புறநெகும மற்றும் தயடகிருல போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதான தீர்மானங்கள் திருமலை மாவட்ட உள்ளுராட்சி சபைத்தலைவர்கள் சந்திப்பில் முக்கியமாக எடுக்கப்பட்டது.

கட்சி பேதமின்றி இன மத பேதமின்றி திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி சபைத் தலைவர்கள் ஒன்று கூடி பிரச்சினைகள் சம்பந்தமாக கிண்ணியா நகரபிதா தலைமையில் பேசப்பட்ட இதுவரை நடவாத ஒன்றானாலும் நடைபெற்றது ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வெளிப்படுத்தி நிற்பதை இந்த ஒன்றுகூடல் எடுத்துக் காட்டுகின்றது. இச்சந்திப்பை ஏற்பாடு செய்த கிண்ணியா நகரபிதா எம்.எம்.ஹில்மி அவர்களை பாராட்டலாம்.

BY M. RAIS
BY M. RAIS

BY M. RAIS
BY M. RAIS

Published by

Leave a comment