
பழுளுல்லாஹ் பர்ஹான்
பாதுகாப்புச் செயலாளரின் ஆலோசனையில் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் சேவையை மக்களின் காலடிக்கு எடுத்துச் செல்லும் செயற்திட்டத்திற்கமைய மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் நடமாடும் பொலிஸ் நிலையம் ஒன்று இன்று மட்டக்களப்பு கல்லடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எஸ்.பி.அஜந்த சமரகோன், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.மவன் சில்வா மற்றும் பொலிஸ் அதிகாரிகள்இஉத்தியோகத்தர்கள் கொண்டு வரப்பட்டனர்.
இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் எதிர்வரும் 27 திகதி வரை நடைபெறவுள்ள காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கான நடமாடும் பொலிஸ் நிலையத்தில் மட்டு-கல்லடி வேலூர் காலி கோயில் இநாவலடி இடச்பார்இதிருச்சந்தூர்இகல்லடிஇவேலூர்இநொச்சிமுனைஇகல்லடிஇஉப்போடைஇநாவற்குடா போன்ற கிராம மக்கள் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
இதன் போது சிவில் பாதுகாப்புக் குழுவும் பிரதேச அமைப்புக்களும் இணைந்து பிரதேசத்தின் சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் கலாச்சார நிகழ்வுகள், சமய நிகழ்வுகள், பாடசாலைகளுக்கிடையிலான விவாதப் போட்டிகள் என்பன நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment